பாகம் 4: சிறுவன்

206 25 1
                                    

முதல் நாள் கல்லுரி எந்த பிரச்னையும் இன்றி சென்றது. வகுப்பில் முக்கால் வாசி பேர் மேல்தட்டு மக்களே. இவளை போன்று ஒரு சிலரே. ரம்யா என்ற பெண்ணுடன் நட்பு கொண்டால் இருவரின் எண்ணங்களும் ஒன்றாக இருந்தது அது மட்டும் அல்ல அவளும் இவள் இருக்கும் பகுதியில் இருந்து தான் வந்திருந்தால். மாலை இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு செல்ல தொடங்கினர். அப்பொழுது ரம்யாவின் தம்பி நகுளிற்கு நாளை பிறந்த நாள் என்று கூறி இவளை வீட்டிற்கு அழைத்தாள். தானும் வருவதாக விடைபெற்று சென்றால். வீட்டின் கதவை திறக்கும் போது ஏதோ சத்தம் கேட்டது, அதுவும் வீட்டின் பின்புறம் இருந்து வந்தது சென்று பார்த்தால் ஒரு சிறுவன்.
    அருகில் சென்று அவன் தோலை  தொட்டால் . திடுக்கிட்டு எழுந்தான்.
யார் நீ? எப்படி உள்ளெ வந்தாய்? இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என்று கேள்விகளால் தினராடித்தல். அந்த சிறுவன் தொலைவில் ஒரு வீட்டை காட்டி அந்த வீட்டில் தான் இருக்கிறேன். எஸ்தர் உடன் விளையாட வந்தேன் என்றான். இவள் குழம்பியவளாய் யார் எஸ்தர்? என்றால். அவன் அந்த பூனையை காட்டினான். இது தான் எஸ்தர். எப்படி வந்தாய் என்றால்? கதவு பூட்ட வில்லை அதான் வந்தேன். காலையில் தாழ் போட்டது நன்றாக நினைவில்
இருந்தது. சரி தாழ் இட்ட  கதவு தானே இவனே கூட திர்ந்திருக்கலாம் என்று விட்டு விட்டால். அவனே மேலும் தொடர்ந்தான்.
   நான் ராகு நீங்க?
   நான் அனு. இங்க புதுசா குடிவந்து இருக்கேன்.
   பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு பலகை சரிந்தது. நாங்கள் திடுக்கிட்டு பார்த்த திசையில் அந்த எஸ்தர் போய் கொண்டிருந்தது. அவன் நான் கிளம்பனும் பிறகு வரேன் என்று ஓடினான். இவள் இங்கு அனைவரும் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள் சரி நாம் புதிதாய் வந்ததால் அப்படி இருக்கலாம் என்று நினைத்தவாறு உள்ளே சென்றால்.

சுழியம்Where stories live. Discover now