ஒரு சுத்தியலும் சாவியும் பேசிக்கொண்டிருந்தன.
''உன்னை விட பெரிதாக இருக்கும் நான் எவ்வளவு முறை அடித்தாலும பூட்டை நீண்ட நேரத்திற்கு பிறகுதான் திறக்க முடிகிறது. உன்னால் மட்டும் எப்படி சுலபமாக பூட்டை திறக்க முடிகிறது? ''
என வினவியது சுத்தியல் .'' நீ பூட்டின் தலையை அடித்து , திறக்க வைக்க முயல்கிறாய்; நான் அதன் இதயத்தில் நுழைந்து அதை திறக்க வைக்கிறேன்'' எனக் கூறியது அந்த சாவி.
அந்த சுத்தியலாக இருப்பதா அல்லது அந்த சாவியாக இருப்பதா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.