பகுதி - 07

509 29 11
                                    

♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 07

ராஜின் அம்மா அதிர்ச்சியில் பயத்துடன் உறைந்தார் அந்த கறுப்பு உருவத்தைப் பார்த்து.

சாமியார் : "யார் நீ... ஏன் இந்த வீட்ல இருக்கிரவங்கல நிம்மதியா இருக்க விடமாட்டிக்கிர..? ஏன் ராஜயே சுத்திக்கிட்டு இருக்க...? சொல்ல போரியா இல்ல அழிச்சிடவா..? (கோபத்துடன்)
கறுப்பு உருவம் : (அழுதவாறு) "ஒன்னு செஞ்சிடாதிங்க சொல்லுறன்.
ஆரம்பமானது.

கயல்விழி போன்ற கண்கள் கோவைப்பழ உதட்டையும் அழகான முகத்தையும் கொண்டவள் யமுனா.
ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக வேலைப்பார்த்து வந்தாள் அவளும் அம்மா,அப்பா சிறிய குடும்பமாக சந்தோசமாக இருந்தாள்.

வழமைப்போல பாடசாலை முடிந்து மாணவர்களுடன் யமுனா வீதியை கடக்கும் போது மோட்டார் சைக்களில் ராஜும் அவனுடைய நண்பன் ரவியும் வந்தனர். அப்போதுதான் யமுனாவைக் கண்டான் ராஜ். யமுனாவும் பாதையைக் கடந்து சென்றாள்.

மறுநாள் ஆபிஸ் போக லேட் ஆகிவிட்டது.
அவசர அவசரமாக ஆயத்தமாகி பைக்கை எடுத்துக் கொண்டு ரவி வீட்டு வாசலில் நின்று ஹோர்ன் அடித்தான் ரவியும் வேகமாக வந்தான்.
ரவி : "என்னடா லேட் ஆகிட்ட..?"
ராஜ் : ''இல்லடா எழும்ப கொஞ்சம் லேட் ஆகிட்டுடா"
ரவி அம்மா : "ராஜ் உள்ள வாப்பா.. காபி குடிக்கலாம்."
ராஜ் : "இல்லம்மா லேட் ஆகிட்டு பின்னேரம் வாரன்"
என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றான் மோட்டார் சைக்களில் வழமைப்போல பாடசாலை மாணவர்களுடன் யமுனா வீதியை கடக்கையில் அந்த வீதியில் வேகமாக வந்த ராஜ் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் ஒரு மாணவன் மேலே பைக்கை மோத வரும் போது யமுனா அந்த மாணவனை பிடித்து அவளின் பக்கம் இழுத்தாள். ராஜ் யமுனாவின் மேலே மோட்டார் சைக்களை மோதி விட்டான். யமுனாவின் காலில் அடிப்பட்டு விட்டது மோதிய அதிர்ச்சியில் யமுனா மயக்கமடைந்தாள். உடனே ராஜ் யமுனாவை வைத்தியசாலையில் அனுமதித்தான்.

அன்று ரவி மட்டும் ஆபிஸ் சென்றான் ராஜ் போன் பண்ணி ஆபிஸின் மேனேஜருக்கு சொன்னான். அவரும் லீவ் எடுக்கச் சொன்னார். ராஜும் யமுனாவின் போனை எடுத்து அவளுடைய அம்மா அப்பாக்கு போன் பண்ணி சொன்னான். அடுத்த மணித்தியாலத்தில் அவளின் அம்மா அப்பாவும் வந்தனர்.
யமுனா அம்மா : "தம்பி என்னாச்சி எங்க மகளுக்கு என்னாச்சி..?"
ராஜ் : "ஒன்னுமில்லமா சின்ன அடிதான் கால்ல. நான்தான் வேகமாக வந்துட்டன் பைக்ல."
யமுனா அப்பா : "என்னப்பா கவனமா போதில்லயாப்பா" (கவலையுடன்)
ராஜ் : "சாரி அங்கல் தெரியாம நடந்துட்டு மன்னிச்சுங்க"

அந்த நேரம் டாக்டரும் வந்து ஹொஸ்பிட்டல் பில்லை கொடுத்தார். ராஜ் முழுத்தொகையையும் கட்டினான்.
டாக்டர் : "கொஞ்ச நேரத்துல கண்திறந்துடுவாங்க கூட்டிப்போங்க" என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றார்.
ராஜ் : "அங்கல் நானும் போரன் சாரி அஙகல்"
யமுனா அப்பா : "பரவாலப்பா தெரியாமதான பண்ண இதுல என்ன அதுக்குதான் இவ்வளோ உதவி செஞ்சிட்டியேப்பா ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாப்பா.."
ராஜ் : "சரி அங்கல்.. நான் பொய்ட்டு வாரன்"
என்று சொல்லி விட்டு யமுனாவின் முகத்தை பார்த்தவாறு சென்றான்.
யமுனாவும் சிறிது நேரத்தில் கண் திறந்தாள். கொஞ்ச நேரத்தில் வீடும் சென்றனர்.
இரவானது ராஜும் உறங்கச் சென்றான் தூக்கமே வரவில்லை யமுனாவின் நினைவாக உருண்டு புரண்டு கிடந்தான்.
ராஜ் : (மனதுக்குள்) வீட்டிற்கு போய் இருப்பாளா? காலையில சரி ஆகிடுமா அவளுக்கு" என்று பல யோசனையோடு உறங்கி விட்டான்.

மறுநாள் நேரத்தோடு எழும்பி குளித்துவிட்டு ஆபிஸுக்கு ரெடி ஆகிவிட்டு சாப்பிடவும் இல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றான். அம்மாவும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தார் எதுவும் சொல்லாமல்.
ராஜ் வேகமாக ரவி வீட்டிற்கு சென்றான்.
ராஜ் : "ரவி.... ரவி.... டேங் எங்கடா..?"
ரவி அம்மா : "என்ன ராஜ் இவ்வளோ அவசரமா"
ராஜ் : "இல்லமா ஆபிஸுக்கு லேட் ஆகிட்டு இன்னும் இவ படுத்துக்கிடக்கான்"
சமயலறையில் இருந்து ஒரு சத்தம் வந்தது
"அம்மாடியோ என்னவொரு வேலப்பற்று உங்க ஆபிஸ் லீவ் நாள்ளயும் திறந்தா இருக்கு"
ராஜ் : (தலைகுனிந்தவாறு) ஆகா என்னடா ராஜ் உனக்கு வந்த சோதன இண்டக்கி லீவ் நாள்னு தெரியாம போச்சி லீவ் மட்டும் சரியா தெரியுமே என்னாச்சி..?"
ரவி : "வேலைக்கு போற நாளவிட லீவ் நாள் மட்டும் உனக்கு நல்லா தெரியுமே என்னடா ஆச்சி உனக்கு.."

ரவி, அம்மா, அப்பா எல்லாரும் சிரித்துக்கொண்டிருந்தனர் ராஜைப் பார்த்து ராஜும் வெட்கித்து தலைக்குனிந்து லேசாக சிரித்துக்கொண்டிரந்தான்.
"அண்ணா உன்னட பிரண்டு ஆபிஸ்ல யாரையும் பார்த்துட்டாரோ..? இல்ல ரோட்ல யாரையும் காலையிலேயே பார்த்துட்டாரு போல" என்று சொல்லிக் கொண்டு சமயலறையில் இருந்து எல்லோருக்கும் காபி கொண்டு வந்தாள் திவ்யா........

தொடரும்......

♡♡ராசாவே உன்ன நம்பி♡♡Where stories live. Discover now