பகுதி - 12

517 32 7
                                    

♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
         - திகில் தொடர்- பகுதி - 12

கொஞ்ச நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அவனுடைய அம்மா, அப்பா வந்திருந்தனர் யமுனாவின் மாமாவும் கேள்விப்பட்டு வைத்தியசாலை வந்தார். ஆனால் யமுனா இருக்கவில்லை. 
யமுனாவின் மாமா : "யமுனா எங்க காணயில்ல?"
ராஜ் அப்பா : "யமுனா வரயில்லயே"
                டாக்டர் வெளியே வந்தார் "ராஜ் இன்னும் கண் திறக்கல தலையில லேசா அடி பட்டு இருக்கு கொஞ்ச நேரத்துல கண் முழிப்பாரு" என்று சொல்லி விட்டு சென்றார்.
யமுனாவின் மாமா : "ராஜோடதான போரனு சொன்னா"
ராஜ் அம்மா : "என்ன சொல்றிங்க அப்ப யமுனா எங்க?"
டாக்டர் வந்து "ராஜ் கண் திறந்துட்டான்" என்று சொன்னார்.

எல்லோரும் ராஜை பார்க்க உள்ளே சென்றனர். ரவியும் அதே நேரம் வந்தான் எதுவும் தெரியாத மாதிரி.
ராஜ் அம்மா : "ராஜ் என்னப்பா ஆச்சி பார்த்து போரதில்லயாப்பா என்ன சரி ஆகியிருந்தா"
ராஜ் : "ஒன்னுமில்லம்மா ஒரு கார் ரோங் சைட்ல வந்து மோதிட்டான்"
         திடிரென ரவியைப் பார்த்து
ராஜ் : "டேய் என்னடா  அண்டக்கி பைக்ல போனது ஆபிஸுக்கு இன்டக்கி எங்க போன காணயில்ல"
ரவி மனதுக்குள் "என்னாச்சி இவனுக்கு செத்துடுவானு பார்த்தா ஏதோ பேசுறான்"
ராஜ் அப்பா : "ராஜ் காலையிலதானடா ரவி வீட்டுக்கு போன"
ராஜ் : "காலையிலயா நான் எங்கப்பா போனன். சரிப்பா யாருப்பா இவரு?" என்று யமுனாவின் மாமாவை பார்த்து கேட்டான்.

யமுனாவின் மாமா: "தம்பி நான் யமுனாட மாமா"
ராஜ் : (குழப்பத்தோடு) "யமுனாவா யாரு அது" என்று கேட்க எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். டாக்டர் எல்லோரையும் கூப்பிட்டு
டாக்டர் : "ராஜ்ட தலையில அடிப்பட்டதுல குறிப்பிட்ட காலத்துல நடந்து எல்லாத்தையும்
மறந்துட்டாரு. எப்ப ஞாபகம் வரும்னு தெரியாது ஆனா அவரு நல்லாதான் இருக்காரு அது சரி யமுனா யாரு?"
ராஜ் அப்பா : "யமுனாவதான் டாக்டர் ராஜ் கல்யாணம் பண்ண இருந்தான் ஆனா இப்ப யாருனு கேக்குறான். ராஜோடதான் யமுனா போனா ஆனா என்ன ஆனானு ஒன்னும் தெரியல"
டாக்டர் : "சோ... நான் நினைக்கிறன் யமுனாவோட பழகின அந்த நாட்களதான் அவரு மறந்து இருக்காரு."

♡♡ராசாவே உன்ன நம்பி♡♡Where stories live. Discover now