பகுதி - 08

472 29 2
                                    

♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 08

எல்லோரும் கலகலப்பாக சிரித்தப்படி காபி குடித்தனர். சிறிது நேரத்தில் ராஜும் வீடும் சென்றான்.
ராஜ் அம்மா : "என்னடா என்னெய்க்கும் இல்லாம புதுசா லீவ் நாள்ள வேலைக்கு போற என்னட என்னாச்சி உனக்கு..?"
ராஜ் : (சமாளித்தப்படி) "இல்லமா சின்ன புரஜக்ட் ஒன்னு அதுதான் வேல நாள்னு நினச்சிட்டு பொய்ட்டன்."
என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குள் சென்றான்.

அறைக்குள் சென்றதும் அவனுடைய போனுக்கு மெசேஜ் வந்து இருந்தது. அதில் "ஹாய்" என்று வந்து இருந்தது. அவனும் யாருனு ரிப்லே பண்ணினான். கொஞ்ச நேரத்தில் யமுனா என்று சொன்னாள்.
இவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான் அடுத்த நிமிடம் யமுனா கோல் பண்ணினாள்.

யமுனா : "ஹலோ"
ராஜ் : "ஹலோ சாரிங்க தெரியாம அவசரத்துல மேல மோதிட்டன்"
யமுனா : "பரவாலங்க தெரியாமதான"
ராஜ் : "சரி என்னட போன் நம்பர் எப்படி தெரியும்"
யமுனா : "ஹொஸ்பிட்டலருந்து போகும் போது மேசையில உங்க விஸ்டிங் கார்ட் இருந்துச்சி அப்பாக்கிட்ட காட்டினன் அப்பாதான் சொன்னாங்க நீங்க போகும் போது கீழ விழுந்துட்டுனு அப்பாதான் எடுத்து வச்சியிருந்தாங்க."
ராஜ் : "ஓ... அப்படியா...! கால் நல்லமா இப்ப நாளைக்கு ஸ்கூல் போவிங்களா?"
யமுனா : "ம்ம்.... போவன் வலி இல்ல"
இவ்வாறு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டனர் அவளின் வீடு இருக்கும் இடத்தையும் சொன்னாள்.

மாலை நேரம் அவளின் வீட்டிற்கு பழங்கள் எல்லாம் வாங்கி கொண்டு போய் அவளையும் அவளின் அம்மா,அப்பாவுடன் பேசிவிட்டு காபி குடித்து விட்டு வீடு சென்றான்.

மறுநாள் காலையில் ரவியோடு ஆபிஸ் செல்லும் வழியில் பாடசாலை வழியாக சென்றான். அந்த சமயம் யமுனாவும் அப்போதுதான் வாசலினுல் நுழைகிறாள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

கொஞ்ச நாட்கள் போன் பேசியும் மெஸேஜிலும் வீதியில் பார்த்துக் கொள்வது போன்றே சென்றது. ராஜின் மனதில் யமுனா ஆழமாக பதிந்துக்கொண்டாள். யமுனா மனதிலும் ராஜ் ஆழமாக பதிந்துக் கொண்டான். ஆனால் இருவருக்கும் மனதில் பயம் இருந்தது மனதில் உள்ளதை சொல்லுவதற்கு.

இருவருக்கும் லீவ் நாள் அன்று ராஜ் காலையில் அவளுக்கு மெசேஜில் "வெளியே போகலாமா" என்று பண்ணிருந்தான். யமுனாவும் "கோயிலுக்கு வாங்கலன்" என்று பதில் அனுப்பிருந்தாள்.
இருவரும் கோயிலில் சந்தித்தனர்.
கோயிலுள்ள மரத்தின் கீழ் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராஜ் : "யமுனா ஒன்னு சொல்லனும்"
யமுனா : "என்ன சொல்லுங்க நானும் ஒன்னு சொல்லனும் உங்ககிட்ட"
ராஜ் : "ஓ.... அப்ப நீங்க சொல்லுங்க"
யமுனா : "இல்ல நீங்களே சொல்லுங்க"
ராஜ் : "ம்ம்ம்.... சரி அது எப்படி சொல்றனு தெரியல ஆனா சொல்லிதான் ஆகனும் நான் சொல்லுறது உங்க மனசுலயும் இருக்குனு நம்புறன்."
யமுனா : "ம்ம்ம்... சொல்லுங்க என்னனு"
ராஜ் : "யமுனா நான் உங்கல விரும்புறன் உங்களேயே கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறன் என்ன சொல்றிங்க நீங்க"
யமுனா : "அப்ப நீங்க இந்த எண்ணத்தோடயா பழகினிங்க நீங்க இப்படி பண்ணுவீங்கனு கனவுள கூட நினைக்கல" என்று கோபத்துடன் எழுந்தாள்.

தொடரும்......

♡♡ராசாவே உன்ன நம்பி♡♡Where stories live. Discover now