3

267 32 27
                                    

பாவம்

தினமும் சாவியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு காரில் ஏறியதும், டேஷ் போர்டில் போட்டுவிட்டு, ஆபீஸ் செல்வது வழக்கம்.

இன்றோ, அவளை ஜூலி வீட்டில் இறக்கிவிட்டு பின்பு செல்ல வேண்டியிருந்தது, அவளது சாவி அவளிடம், என் சாவியோ வீட்டில். கர்ப்ப காலத்தில் கூடுதல் நடை என்னமோ அவசியம் தான், ஆனாலும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு, அவளை அவசரப் படுத்தி, வரவழைத்து கதவை திறப்பதற்கோ யாருக்கு மனம் வரும்?

அதனாலேயே, ஒரு சாவியை நான் எடுத்துக்கொண்டு போவதும், மற்றொன்றை அவள் வைத்துக்கொள்வதுமாக இருந்தது. இன்று, அதை மறந்தாயிற்று.

காரிலிருந்து இறங்கி, கதவிற்கு சென்று மெதுவாக கதவை தட்டினேன். இந்த காலிங் பெல்லோ ஊரையே கூட்டுமளவு சத்தம் போட்டுவிடுமென பயம். அவள் தூங்கிக்கொண்டிருந்தால், கணீரென்று ஒலித்து திடுக்கென்று எழுப்பிவிட கூடாதென்ற கவனத்தினால், கதவை தட்டுவது தான் பழக்கம்.

பதிலேதும் வரவில்லையென்றதால், மீண்டும் கதவை தட்டினேன்.

"டூ மினிட்ஸ் அர்ஜுன். வந்துட்டேன்." என்று அவளது குரல் மட்டும், அவசரமாக கேட்டது.

இதனாலேயே பயந்து என் சாவியை தினமும் எடுத்து போவதுண்டு. "அவசரம் இல்ல பேபி, மெதுவா வா," என்று பதிலளித்து விட்டு, கதவு சட்டத்தில் சாய்ந்தவாறு கைகளை மார்பின் குறுக்கே, இணைத்து நின்றேன்.

இரண்டரை நிமிடங்களில், கதவு திறக்கும் ஒலி கேட்டு நேராக நிற்க, கதவு திறக்கப்பட்டது.

காட்டன் ட்ரௌசர்சும், ஒரு தொள தொள சட்டையும் அணிந்து, தலை முடியோ ஒரு ஒய்யார கொண்டையில் நிற்க, லேசாக வாடியிருந்த முகம் இப்போது பளீரென்று இருந்தது. எப்போதும் குவிந்திருக்கும் இதழ்கள் பெரிதாக விரிவடைந்து, ஒரு விதமான அவளுக்கே உரிய மென்சிரிப்பை அணிந்திருந்தன. சிரிப்பை பார்த்ததும், எதோ காணாததை கண்டவன் போல் நானும் இளித்தேன். இது என்ன பைத்தியக்காரத்தனமோ! அவள் முகத்தில் சிரிப்பை பார்த்தால், எனக்கும் அதே கதி.

காதலாட!Where stories live. Discover now