என்றோ அடித்து draftsஇல் சேர்த்து வைத்திருந்த resignation letterஐ கண்களில் கோபமும், எரிச்சலும் மிதமிஞ்சி எழுந்திருக்க பார்த்திருந்தாள் வன்ஷி. எத்தனையோ நாட்கள் இங்கிவ்வாறு அதனையே வெறுத்து பார்த்ததுண்டு. ஆனால் அத்தனையும் அந்தப் பார்வை பார்ப்பதோடு முடிந்துவிடும். அன்றைய பொழுதும் விடிந்துவிடும். ஒரு நாளும் அந்த mailஐ அனுப்பியதில்லை. ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அதனை முறைத்துவிட்டு அந்த tabஐ மூடிவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிடுவாள். ஆனால், இன்று அப்படியில்லை.
எத்தனை நாட்கள் சாப்பிடவும் நேரம் தராது அமர்த்திவைத்து வேலை வாங்கியிருப்பான் இந்த team leader. வாரத்தில் தரப்படும் விடுப்பு நாட்கள் தவிர்த்து தானாய் என்றுமே விடுப்பு கேட்டதில்லை, கேட்டிருந்த ஒன்றிரண்டு நாட்களில் இவன் தந்ததும் இல்லை. செத்தாலும் இங்கு வந்து இந்த பாழாய்ப்போன computer முன்னமர்ந்து சாகச்சொல்பவனல்லவா. அவன் மட்டும் தன்னிஷ்டம் போல் வருவதும், போவதும், வேலை நேரத்தில் அமர்ந்து சொந்த வேலையுமாய் இருக்கலாம் ஆனால் நடுவில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் ஆள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என்று எதாவது நொண்டி சாக்கு சொல்லிவிட்டு அதற்கெல்லாம் சேர்த்து வேறு வேலை வாங்க வேண்டியது!
இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் செய்யும் வேலைகளில் இது சரியில்லை அது சரியில்லை என்று வேண்டுமென்று குறைகூறி மற்றவர் முன் ஒரே அடியாய் அவமானப் படித்துபவனை எப்படி பொறுத்து வேலை செய்வது. ஒன்றிரண்டு முறை அவள் அவனை எதிர்த்து பேசியதில் இருந்து இவையாவும் பன்மடங்கு ஆகிவிட்டது வேறு. எதிர்த்து பேசியதும் ஒன்றும் திமிராய் இல்லையே. அவன் வேலையையும் சேர்த்துத் தன் தலையில் கட்டியதை முடியாது என்று சொல்வதையொட்டித்தானே அவள் அன்று பேசினாள். அன்று சத்தமின்றி சரியென்றவன் அதன்பின் தினமுமல்லவா ஓராயிரம் குற்றங்குறை கூறி வதைத்துத் தள்ளுகிறான்.
செய்யும் வேலையில் சுத்தமும், sincerityஉம் கொண்டு தானே அவள் அத்தனையையும் செய்து வருகிறாள். இன்னும் சொல்லப்போனால், சீனியரான அவனை விட அவள் செய்யும் வேலைகளில் எல்லாம் நேர்த்தி உண்டு.