4

327 28 60
                                    

The following characters are from my english story, Hopeful Streaks. :)

Chapter dedicated to SaruPreethi 😘

அன்றிரவு ஜெய் வீட்டிற்கு வரும் முன்பாய் உறங்கியிருந்த எனக்கு, இருள் ஊடுருவிப்படர்ந்திருந்திருக்கும் அந்த மாயவேளையில் திடீரென விழிப்பு வந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. கண்விழித்த போது அருகில் மெத்தை காலியாகி கிடந்த போது விருட்டென்று எழுந்து அமரச்சொன்னது மூளை.

போர்வை சுருளாய் மடியில் மடிந்திருக்க, கண்மறைத்த குழல்யாவையும் ஒதுக்கி பின் அலைபேசியை தேடி கையில் எடுத்து பார்த்த போது மணி 2.30. அலுவலக வேலையானாலும், இத்தனை நேரமெல்லாம் கண்முழிக்கும் பழக்கம் இந்த வீட்டில் யாருக்கும் கிடையாது. Emergency அழைப்பு வந்தாலும் அந்நேரம் எழுந்து சென்று பார்த்து, பின் வந்து உறங்கிய ஆக வேண்டும்; தூக்கம் இல்லாவிட்டால் மறுநாள் படாத பாட்டையெல்லாம் தாங்கமுடியாது என்று தூங்குவது தான் பழக்கம். இன்று என்ன புதிதாய் தூங்காமல் இந்நேரம் வரை முழித்திருப்பது!

மெத்தைக்கு பின்னால் உள்ள passgeஇன் ஊடே வரும் பால்கனி கதவு ஒய்யாரமாய் திறந்துவைக்கப்பட்டு, அங்கு குளிராய் அலைந்திருந்த காற்று உள்ளே வரவேற்கப்பட்டிருந்தது.

அருகில் இல்லாத மனிதர் அங்கு நின்றிருப்பதாய் உணர்ந்தது மூளை. அழைத்து பார்க்கலாமா, என்று யோசித்து முடிவெடுக்கும் முன்பாகவே அவர் பெயர், என் குரலில், காற்றின் ஓசையை உடைத்து ஒலித்தது. "ஜெய்!"

பதில் வரவில்லை. கேட்பது காதில் விழாமல், இவருக்கு என்ன ஆயிற்று! பால்கனியில் இருந்தாலும், இவர் மனம் அங்கு அவரோடு இல்லை.

"ஜெய், அங்க என்ன பண்றீங்க?" குரல் இரைந்ததில், திடுக்கிட்டவராய் சிரத்தை உணர்ந்தவர் போல் அவரது குரல் அப்போது தழுதழுத்து ஒலித்தது. ".....ஆங்? இங்க தான்மா இருக்கேன்.."

மடியில் கிடந்த போர்வையை சுருட்டி மெத்தைமேல் கிடத்தி, பால்கனிக்கு நடந்தேன். உடுத்தியிருந்த சட்டையின் உடம்பில் ஒட்டாத உதிரிகள் காற்றில் கிழிந்த காகிதமாய் படபடக்க, கடல் காற்றில் இந்த நள்ளிரவில் நின்று எதையோ நினைத்து கொண்டிருப்பவரை என்ன சொல்லி அழைத்தாலும் காது கேட்காதில்லையா!

காதலாட!Where stories live. Discover now