Marukkathe Nee Marakkathe Nee - 7

997 100 49
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 7
முதல் நாள்...

அமிதாவின் பொட்டிக்கில் சம்யுக்தாவிற்கு காலை முதல் வேலை சரியாக இருந்தது. பொட்டிக்கின் கீழ் தளத்தில் கடையும், முதல் தளத்தில் தையலகமும் இருந்தன.

இன்று காலை அமிதா போன் செய்து, தனக்கு உடல்நிலை இன்னும் சரியாகவில்லை என்று சொன்னாள். அகிலனுக்கு ஸ்டேஷனில் வேலை அதிகமாக இருப்பதாலும், அவளது தங்கை சுமிதாவிற்கு தேர்வுகள் இருப்பதாலும், இரண்டு நாட்கள் கடையை பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டாள்.

சம்யுக்தாவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் லீவ் இருந்ததால், சரியென்று ஒத்துக் கொண்டாள். நவராத்திரி நெருங்கி வருவதாலும், முகூர்த்த நாட்கள் வரிசையாக இருப்பதாலும், வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தபடி இருந்தனர்.

இரவு எட்டு மணிக்கு, முதல் தளமான தையலகத்திருந்த ஆடை வடிவமைப்பாளர்களும், தையல் வேலை செய்பவர்களும் சென்று விட்டனர். கீழ் தள கடையில் அவளும், ஒரு பெண் மேலாளர் மட்டுமே இருந்தனர்.

அன்று நடந்த விற்பனையும், கையிருப்பு ரொக்க பணத்தையும் சரிபார்த்த மேலாளார் ரத்னா, "சம்யு மேம், இது வரைக்கும் கணக்கு சரியாயிருக்கு. நீங்க கிளம்புங்க. நான் கடையை மூடிட்டு பணத்தை அமிதா மேடமிடம் கொடுத்திட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன்" என்றாள்.

"ரத்னா, தினமும் எப்போ கடையை மூடுவீங்க?" என கேட்டாள்.

"ஒன்பது மணிக்கு மேம்" என்றாள் ரதனா.

"நான் இன்னும் அரை மணி நேரம் இங்கே இருக்கேன். அமிதாவோட கடை சாவி எங்கிட்ட இருக்கு. வாட்ச்மேன் உதவியோட நான் கிளம்பும் போது பூட்டிட்டுப் போறேன். நீ கேஷை பத்திரமா எடுத்துட்டுப் போய் அமிதாவிடம் கொடு. பஸ்ஸில் போக வேண்டாம். ஆட்டோவில் போ" என்றாள் சம்யுக்தா.

சரியென்று தலையசைத்து விட்டு ரத்னா சென்று விட, கடையின் ஹாங்கரில் தொங்கி கொண்டிருந்த உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now