Marukkathe Nee Marakkathe Nee - 11

963 106 170
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 11
ஐந்தாம் நாள்...

"சம்யு, என்னை எதுக்கு அவங்க பூஜைக்குக் கூப்பிட்டாங்க?" என சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி கேட்டாள் ஸ்மிருதி.

யதுநந்தன், ஸ்மிருதியைப் பற்றி கேட்டதை சொல்லலாமா என யோசித்தவள், அவன் எல்லா பெண்களுடன் ஃபளர்ட் செய்வதை நினைத்தவள், எதற்கு வீணாக அதைப் பற்றி பேச வேண்டும் என்று தவிர்த்தாள்.

"தெரியலை ஸ்மிருதி, அவங்களுக்குச் சென்னையில் கொஞ்சம் பேர் தான் தெரியும் போலிருக்கு. சுநீதி ஆண்ட்டியை உனக்குத் நல்லா தெரியுமா?" என கேட்டாள்.

"மித்ரன் அண்ணா கல்யாணத்தில் சும்மா பேசினாங்க. அவ்வளவு தான்" என தோளைக் குலுக்கினாள்.

ஒரு வேளை சித்தார்த், ஸ்மிருதியைப் பற்றி சொல்லியிருப்பானோ என்று சம்யுக்தா யோசித்தாள்.

"சித்தார்த்தையும் கல்யாணத்தில் பார்த்தது தான். அதற்குப் பிற்கு அவனையும் பார்க்கவே இல்லை" என சொன்ன ஸ்மிருதி, "நேற்றைக்கு நைட் அவங்க திடீரென்று போன் செஞ்ச போது யாருனு தெரியலை. அப்பறம் சித்தார்த்தோட அத்தை என்று சொன்ன பிறகு தான் அடையாளம் தெரிஞ்சுது" என சொன்னாள்.

"ஸ்மிருதி, இந்த லைட் கீரின் பட்டுப்புடவையில் சூப்பராயிருக்கே. உன்னை புடவையில் பார்த்தே ரொம்ப நாளாச்சு. கடைசியா காலேஜ் ஃபார்வெல் போது பார்த்தது" என தன் ரெட்ரோஸ் நிற பட்டுப்புடவையின் மடிப்பில் பின் குத்தினாள்.

"சுநீதி ஆண்ட்டி கூப்பிட்டாங்கனு அம்மா கிட்டே சொன்னேன். அவங்க தான் பூஜைக்குப் போறதால, புடவைக் கட்ட சொல்லி கட்டாயப்படுத்தினாங்க" என அலுப்புடன் சொன்னாள் ஸ்மிருதி.

"எங்கம்மாவும் காலையிலே பூஜைக்குப் பட்டுப்புடவை தான் கட்டணும்னு சொல்லிட்டாங்க" எனறப்படி தன் கழுத்தில் ரூபி பெண்டெண்ட் வைத்த செயினை அணிந்தாள் சம்யுக்தா.

"சம்யு, உனக்கு டார்க் ஷேட் கலர் தான் அழகாயிருக்கு" என ஸ்மிருதி சொன்னவுடன், சித்தார்த் அன்று கடையில் அதையே சொன்னது நினைவில் வந்து போனது.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now