வானவில் வீதியில்,
வெண்முகில் தேரினில்,
விண்மீன் மாலையிட்டு,
செவ்வான் திலகமிட்டு,
கார்மேகம் மத்தளமாய் கனிதென்றல் பூங்குழலாய்,
மின்னல் படம்தனில் பெண்ணிலவை கரம் பிடித்து ,
மூவரும் தேவரும் மூவுலகும் சூழ்ந்திருக்க, முன்னிருக்கும் அவள் பொன்கழுத்திலே, தாலியுடன் சேர்ந்து நானும் பிணைந்து கொள்வேன், நான்காம் முடிச்சாக.
YOU ARE READING
எழுதா கவிதை என்னவள்
PoetryCollection of my poems , beware mostly romantic, few sarcastic, rest dramatic