தோல்வி

200 41 32
                                    

கண்கள் சிவக்குதடி காரிகை உனை நினைத்து

நெஞ்சு பொறுமுதடி உன் நேசம் தான் பொய்யோ.. !

நொடிகளில் யுகம் வதைத்தாய் ,
தேகம் தீயினில் நீ புதைத்தாய் 

கண்ட கனவெல்லாம் கானல் நீர் தானோ..!

தொட்ட இடமெல்லாம் அமிலம் பொசுக்குதடி,
இதயம் அறுத்திட்டாய் இன்னுயிர் நோகுதடி,
உன்னை வெறுத்திடவே யுகம் பல வேணுமடி,

எண்ணும் நொடிகளிலும் என்னை ஏளனம் செய்யுதடி

அற்ப சிறு உயிரை மாயத்திடும் வழி கூறாய்..!

அழுகும் உடலன்றோ பிறிதொரு உடல் தாராய்...!

எழுதா கவிதை என்னவள்Where stories live. Discover now