18.9K 207 52
                                    

கவின்: டேய் கபில் எழுந்திரிடா... நைட்டுல கடலை போட்டுட்டு தூங்குறத பாரு

கவினோட ரூம்மேட் நண்பன் தான் இந்த கபிலன். இன்னும் அஸ்வின் அருள்மொழி யும் இவுங்கலாம் ஒரே ரூம்ல தான் இருக்காங்க

கபில்: ப்ளீஸ்டா கவின் நான் என் டார்லிங் கூட கனவுலகில் இருக்கேன் டா.. தொல்லை பண்ணாத.. அந்த இரண்டு லூசுங்களையும் எழுப்புடா முதல்ல

கவின் : அவன்ங்க எப்போதோ ரெடி ஆகிட்டான்ங்க ...நீ இப்படியே கனவுலகில் இருந்தால் உன்னோட டார்லிங் ட வசமா நேர்ல வாங்கி கட்டிக்குவ டா

அப்போ கபில் மொபைல் ரிங் ஆகுது.. ஹா ஹா .. உன்னோட லவ்வர் கால் பண்ணிட்டா நல்லா வாங்கி கட்டிக்கோ

கபில்: அச்சச்சோ ஹால்டிக்கெட் வாங்க வரேன்னு சொன்னத மறந்துட்டு தூங்கிட்டேனே.. இப்போ இவ வேற சாமி ஆடுவாளே.. சரி பேசி சமாளிப்போம்

பிரியா டார்லிங் .. இன்னும் 10 mins டா.. நான் அங்க இருப்பேன்... (ஆமாங்க பிரியா இவன் கிளாஸ் தான் இரண்டு பேரும் லவ்வர்ஸ்)

ப்ரியா: டேய் நீ இன்னும் தூக்க கலக்கத்தில் உள்ள போல.. உண்மையா ரெடி ஆகிட்டியா

கபில்: "அச்சச்சோ கண்டு பிடித்துட்டாளே... இல்லை ப்ரியா குட்டி.. நான் ரெடி ஆகிட்டேன்.. இந்த அஸ்வி தான் லேட் ஆக்கிட்டான்.. அதான் அவனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்

அப்போ அஸ்வி கொலவெறி யோட பார்த்துட்டு இருக்கான் .. இல்லை முறைத்து கொண்டு இருக்கான்.. அத பார்த்து அருள் கவின் சிரித்துக் கொண்டு இருந்தனர்

அஸ்வி ட இருந்து எஸ் ஆகி போய் ரெடி ஆகிட்டு வந்துட்டான்.. எல்லாரும் கடைசி ஆண்டு தேர்வுக்காக ஹால்டிக்கெட் வாங்க சென்றனர்

காலேஜ்ல ப்ரியா அவளோட தோழிகள் ரம்யா ,கவிதா வோட இவுங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க... இவுங்கள பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர்

ரம்யா: ஏய் கவி வலியுது டி தொடச்சுக்கோ

கவி ரம்யா வ பார்த்து சிரிக்கிறாள்..
ஏண்டி கவின் தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டான்ல.. அப்பறம் எதுக்கு டி இப்படி சைட் அடிக்கிற.. உனக்கு வெட்கமாக இல்லையா.. ஏய் பிரியா நீயாது கேளேன் டி சொல்லிட்டு திரும்பி பார்த்தா அவ கபிலோட பேசிட்டு இருந்தா

உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ