2.7K 162 30
                                    

இளாவின் தந்தை இந்த கல்யாணம் நடக்காது.. என்றவுடன் என்ன செய்வது என்று புரியாமல் கவினும் இளாவும் தவித்து கொண்டு இருந்தனர்...

கவின் காரணம் கேட்டும் அவனிடம் பேசவிரும்பவில்லை என்று‌ மூஞ்சியில் அடித்தது போல் இளா அப்பா சொல்லிவிட்டார்...‌ அதனால் இனி பேசி பயனில்லை என்று கவினும் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை ..

இளாவும் தன் அப்பா சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்று கூறியதால் கோபத்தில் அவளிடமும் பேசுவதை நிறுத்திவிட்டான் ..

இளாவோ தன் அப்பா மறுப்பதற்கான காரணமும் அறிய முடியாமல் தன்னவனும் தன்னை புரிந்துக் கொள்ளாமல் பேசவில்லை என்பதாலும் ஒழுங்காக சாப்பிடாமல் தூக்கமின்றி மனநிம்மதி இழந்து பொலிவிழந்த முகத்துடன் எடை குறைந்து நடமாடிக் கொண்டிருந்தாள்..

கவினின் அம்மாவோ அது இளாவின் அப்பாவின் விருப்பம் என்று கூறிவிட்டாள்...

இவ்வாறு நாட்கள் கடந்த நிலையில்.. தன் அக்காவின் நிலையை காண இயலாத ஆதவ் " அக்கா ..அப்பாவிடம் பேசு.. இப்படி இருக்காத .. நல்லாவே இல்லை.. "

"இல்லை டா .. பேசி என்ன ஆக போது .. என் தலையில் இதான் எழுதிருக்குனா யாரால் மாற்ற முடியும்"

'அக்கா .. அழாத .. நீயும் கவின் மாமாவும் சேர்ந்து பேசுங்க ..  கண்டிப்பா எதாவது தீர்வு கிடைக்கும் என்று தோணுது.. எனக்காக .. இந்தா போன் போட்டு வரச்சொல்லு ப்ளீஸ்"

"வேணாம் டா.. ப்ளீஸ்.. அவன் போன் பண்ணாலும் எடுக்க மாட்டான்.. நான் என்ன பண்ணுவேன்.. இதை கூட புரிஞ்சுக்க முடியாம கோவமா இருந்தா.. அவனுக்கு எப்போ பேச வேண்டும் என்று தோனுதோ அப்போவே பேசட்டும்" என்று சொல்லிவிட்டு கீழே சென்று விட்டாள்..

அங்கு எதிர்பாரத விதமாக அவள் அம்மாவும் அப்பாவும் பேசுவதை கேட்க நேர்ந்தது.. அதை கேட்டவுடன் அவள் அப்பா மறுப்பதற்கான காரணம் கவினின் தாய் என்று அறிந்ததும் இதற்கு யார் மீது குறை சொல்வது என்று தெரியாமல்.. கவினிடமும் சொல்ல முடியாமல் தன் அறைக்கு வந்து அழ ஆரம்பித்தாள்...

உயிரினில் கலந்த உறவானவள் ( Completed)Where stories live. Discover now