சிலிர்க்க வைத்த காற்றின் திசையில் என் சிந்தையும் பார்வையும் திரும்பியது. அங்கும் இங்குமாய் அலைந்த என் கண்களில் அகப்பட்டது கண்ணாடிக்குள் அடைபட்டிருந்த என் கணவனின் அழகிய புகைப்படம்.
காற்றில் ஆடிய அப்புகைப்படம் கணப்பொழுதில் என் கடந்த காலத்தைக் கண்முன் கொண்டு வந்தது."ஏதாவது சாப்பிடறியாம்மா?" என்று அத்தையின் குரலைக் கேட்டுக் கவனம் சிதைந்து திரும்பினேன். "வேண்டாம் அத்தை" எனக் கூற வாய் திறந்தும் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கவே, தலையை மட்டும் சிறிது அசைத்து மறுப்புத் தெரிவித்தேன். அத்தையும் புரிந்துகொண்டு என் அருகில் நின்றிருந்த என் இளம்பாலகனின் இடக்கையைப் பிடித்துக் கொண்டு இடம்பெயர்ந்தாள்.
மீண்டும் என்னை அதே 'சில்' காற்று உரசிச் சென்றதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னை வழி நடத்துவதுபோல என் கால்கள் என்னையும் அறியாமல் அந்த இளங்காற்று வந்த திசை நோக்கி நடக்கலாயின. வீட்டின் பின்புறக் கதவு திறந்திருக்க, காற்றின் வேகத்தில் மரவிலைகள் சலசலக்க, நேரமோ மெதுவாய்க் கடக்க, மனமோ படபடக்க பின்புற வாயிலைத் தாண்டி என் கால்களைப் பதித்தேன். வாயிலைத் தாண்டியதும் திடீரென எல்லாம் அடங்கி அமைதியோ அரவணைத்தது. அங்கே...
(தொடரும்...)
ESTÁS LEYENDO
"கயல் விழியும் காதல் கணவனும்"
Terrorகாதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.