என் கணவர் என்னை நெருங்கி வர வர, என் கால்கள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. அவருடைய அழகிய முகமும் கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விகாரமாக மாறிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் இதயத்துடிப்பின் ஒலி இடியென என் செவிமடல் வரை எட்டியது.
அவர் நீட்டிய விரல்களும் நகங்களும் நீண்டு கொண்டிருந்தன. பின்னே நகர்ந்து சென்று கொண்டிருந்த என்னை எதுவோ தடுக்க திரும்பிப் பார்த்தேன். அந்தப் பாழடைந்த கிணறு இருந்தது. கிணற்றிலிருந்து என் பார்வையை விலக்கி என் கணவரைப் பார்க்கத் திரும்பினேன். அங்கே அவரைக் காணவில்லை.
என்னவென்று புரியாமல் குழம்பிப் போனேன். அப்போது திடீரென கிணற்றுக்குள்ளிருந்து ஒரு கை வந்து என் சேலையின் முந்தானையைப் பிடித்துக் கிணற்றிற்குள் இழுத்தது. "ஆஆஆ..........." என்று அலறியபடியே நானும் சட்டென்று நிலை தடுமாறி அந்த இருட்டுக் கிணற்றுக்குள் விழுந்தேன்.
இருள் மேலோங்கியிருக்க அக்கிணற்றுக்குள் பயம் பற்றிக்கொள்ள நான் வியர்வையால் நனைந்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது புரியாமல் கதிகலங்கிய நான், என் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.
குளிர்ச்சி நிறைந்த ஏதோ ஒன்று என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென என் முந்தானையை யாரோ இழுத்ததுபோல் இருந்தது. திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தேன். கிணற்றின் அருகில் கிணற்றினை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ என் முந்தானையைப் பிடித்து இழுப்பதை அறிந்து திரும்பிப் பார்த்தேன். என் மகன் நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி்னேன்.
அப்போது என் பின்னால் கிணற்றின் பக்கம் இருந்து "கயல்......." என்று அதே வினோதமான குரல் கேட்டது இம்முறை மிகவும் விகாரமாக. "ஆஆஆ.............."(முற்றும்)
(
குறிப்பு :)
வாசகர்களே ! ஏற்கனவே நான் கூறியபடி இக்கதை என்னுடைய கனவில் தோன்றியது. இறுதிக் கதை முடியும் முன்னே என் கனவு கலைந்துவிட்டது. ஆகையால் இக்கதையின் இறுதியை உங்கள் கற்பனையிலேயே விட்டுவிட்டேன். இக்கதையின் முடிவு கயல்விழியின் கனவாகவோ அல்லது பிரமையாகவோ இருக்கலாம். அல்லது அவளுடைய கணவனின் ஆவி அவளையும் அவள் பிள்ளையையும் கிணற்றில் இழுத்துக் கொண்டிருக்கலாம். முடிவு உங்கள் கற்பனையில். நன்றி!
BINABASA MO ANG
"கயல் விழியும் காதல் கணவனும்"
Horrorகாதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.