" ப்ளைட் நம்பர் 22A7 , சென்னை டு துபாய் வில் டிபார்ட் ப்ரம் டெர்மினல் ஒன் "
என்ற அறிவிப்பு சென்னை விமான நிலையத்தின், காத்திருப்பு அறையிலுள்ள காலி இருக்கைகளை கடந்து, தலை கவிழ்ந்து நெற்றியை கையில் தாங்கியவாறு அமர்ந்திருந்த அவள் செவியை சேர்ந்ததும், சட்டென நிமிர்ந்து தன் முன் இருந்த எல்சிடி டிஸ்ப்லேயை பார்த்தாள்.அங்கு ஒன்றன் கீழ் ஒன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்த பிளைட்களில், அவள் எதிர்பார்த்த மும்பை ப்ளைட் இப்போதும் இல்லை. மணி பனிரெண்டை தாண்டி இருந்தது, அரை மணி நேரம் முன்னால் வந்திருக்க வேண்டிய ப்ளைட் இன்னும் சேர்ந்த பாடில்லை. இவளுடன் வந்திருந்த லக்ஸாவையும் காணவில்லை.
தன் பேக்கிலிருந்த வாட்டர் பாட்டிலால் தொண்டையை நனைத்தாள். தலைமுடியை வாரி ஒரு பின்னலிட்டாள், வில்லென வளைந்த புருவங்களுக்கிடையே விலகியிருந்த நுண்ணிய கரும்பொட்டை இழுத்து பழைய இடத்தில் விட்டாள், நான்காண்டு காலம் புழங்கிய கம்ப்யூட்டரின் கறை, கருவளையமாக கண்ணை சூழ்ந்திருந்தது. இருபத்தைந்தை தாண்டியதன் விளைவாக லேசாக சதை போட்டிருந்தாலும் அவள் அழகில் எள்ளளவும் குறையவில்லை.
சோம்பல் முறித்தபடி சுற்றி நோட்டமிட்டாள் , விமான நிலையமே ஏறக்குறைய வெறிச்சோடி தான் இருந்தது. இவள் பின்னால் இருவர் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தனர். முன்னாள் ஒரு ஹனிமூன் தம்பதிகள் போல, அவர்களை மட்டுமன்றி சுற்றியிருந்த விமான நிலையத்தையே மறந்து, தேனிலவை தெகிட்டா நிலவாக இங்கிருந்தே தொடங்கி விட்டனர்.
" ஜனனி.. முழிச்சுக்கிட்டியா.. " என்றபடி அருகில் அமர்ந்தாள் லக்ஸா.
" இப்போதான், நீ எங்க போன.. "
" ப்ளைட் டிலே டீடைல்ஸ் கலக்ட் பண்ண தான்.." என்று அவள் சொன்ன பொய்யை காட்டிக்கொடுத்து பேச்சில் கலந்த சிகரட் வாடை. லக்ஸா லண்டனில் பிறந்தவள், அவளுக்கு இதெல்லாம் சகஜம் என்றாலும் ஏனோ இவளிடம் வெளிப்படையாக சொல்ல தயங்குகிறாள். உரிமையாக கேட்குமளவு நெருக்கமுமில்லை ஆபீஸ் பழக்கம் தான், அவளும் இதே ப்ளைட்டில் தான் போகிறாள் என்பதே ஏர்போர்ட் வந்த பிறகு தான் ஜனனிக்கு தெரிந்தது. அவள் ஏன் போகிறாள் என இவளும் கேட்க வில்லை இவள் எங்கே போகிறாள் என அவளும் கேட்கவில்லை.
ESTÁS LEYENDO
இறகாய் இரு இதயம்
Romanceவாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருட...