"அம்மா போதும்மா..."
“ரெண்டு தாண்டி சாப்பிட்ட, நீ வாயாடுறதுக்கே அது போதாது..” மேலும் இரண்டு இட்லியை ஜனனியின் தட்டில் போட்டபடி நகன்றாள் அவள் தாய்.
“ராஜி வேற வாசல்ல நிக்குறாம்மா.. சொன்னா கேக்க மாட்டியே..” மாத்திரை போல இட்லியை முழுங்கியவாறே முனகினாள் ஜனனி.
“ஏன்டி சாயங்காலம் சீக்கிரம் வந்துடுறியே.. பக்கத்தாத்து மாமி பாட்டு கிளாஸ் வச்சுருக்காளாமே.. போயிட்டு வாயேன்... அக்கம் பக்கத்து வீட்டு பொடுசுங்க எல்லாம் போறதுகள்..”
“பாட்டா... அதெல்லாம் எனக்கு வராதும்மா..”
“வராதுன்னு தான் போக சொல்றது.. நாளை பின்னே மாப்பிள்ளை ஆத்துக்காரா பாட சொன்னான்னா பேந்த பேந்த முழிக்க கூடாதோன்னோ?”
“அவா ஏன் பாட சொல்றா.. இப்போதான் டிவி எல்லாம் இருக்கே.. அதுல கேட்டுண்டு போகட்டும்..” கடைசி இட்லியை விழுங்கி தண்ணியை குடித்து முடித்தாள்.
“பொண்ணுன்னா இதெல்லாம் தெரியனும்டி..”
“ஓஹோ.. அப்போ நானும் பையனை ஜாக்கிசான் மாதிரி பல்டி அடிக்க சொல்லேன்..” என்றவள் தேடிய புத்தகங்கள் அகப்பட்டதும் சிட்டாய் பறந்தாள். தொலைவில் அவள் தாய் “பெருமாளே இவளை வச்சுண்டு என்னென்ன அவப்பெயர் வாங்க போறோமோ..” என பகவானுக்கு தந்தி அடிப்பது பாதி கேட்டது.
“எவ்ளோ நேரம்டி நிக்குறது.. சீக்கிரம் வர மாட்டியோ?” சிலுத்துக்கொண்டாள் அவள் தோழி ராஜி.
“விடு விடு.. கொஞ்சம் தான் லேட் ஆச்சு.. ஆமா இன்னைக்கு டெஸ்டுக்கு படிச்சுட்டியா?” லாவகமாக பேச்சை மாற்றி தப்பிக்கொண்டாள் ஜனனி.
பேசிக்கொண்டே சிறிது தூரம் கடந்திருப்பர். தேர்வை பற்றி தொடங்கிய பேச்சு, புலம்பலாகி, புலம்பல் தேம்பலாக மாறும் வேளை, தொலைவில் எதேச்சையாக பார்த்தவளது முகம் லேசாக மாறி போக அதனை இனம் கண்டுக்கொண்டவளாக ராஜி, “ஏய், நான் இங்க புலம்பிட்டு இருக்கேன், அங்க என்னத்த பாக்குற?”
KAMU SEDANG MEMBACA
இறகாய் இரு இதயம்
Romansaவாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருட...