💞பகுதி-13💞

2.8K 87 44
                                    

தன் நாடியில் கை கொடுத்து...பயத்தோடு....ஏதோ கப்பல் கவுந்ததை போல் தன் கல்லூரின் கார்டனில் அமைந்திருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்தால் மகி....

ஸ்டோன் பெஞ்சின் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து...ஏதோ தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்ததால் சத்யா....

சத்யாவின் அருகே சோகமான முகத்தோடு தன் வாட்ச்சையும் கல்லூரியின் நுழைவாயிலையும் மாறி மாறி பார்த்தவாறே... அமர்ந்திருந்த மகேஷின் அருகில் நிம்மதியாக மரத்தில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வினய்....

தன் நினைவுகளில் இருந்து முதலில் வெளி வந்த மகி...மகேஷிடம்..."டேய்...மக்கி...என்னடா போனவங்கள இன்னும் காணோம்....இவ்வளவு லேட்டாச்சு.....ஆனா இன்னும் வரல...."என்று பயத்தோடு கூற அது எதுவும் அவனது காதில் விழவில்லை.....

தன் கேள்விக்கு பதில் வராமலிருக்க.... கோபம் கொண்டவள்...."டேய்...பக்கி...மக்கி....செவிடா....."என்று கத்திக் கொண்டு இருக்க...

மகியின் சத்தத்தில் தன் நினைவுகளிலிருந்து வெளி வந்தவன்...."ஏய்...உனக்கு எத்தன தடவ சொல்றது...மக்கி...பக்கினு எல்லாம் கூப்பிடக் கூடாதுன்னு....எனக்கு அப்படி கூப்பிட்டா புடிக்காதுன்னு தெரிஞ்சும் கூப்பிடுற.... உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான்... "

"ஆமாண்டா எனக்கு கொழுப்பு அதிகம் தான்...கூப்பிட்டா காது கேட்குமா உனக்கு...செவிடா..."என்று சத்தமாக கூறிவிட்டு "ஐயோ....கிருஷ்ணா...இவன வச்சிட்டு என்ன பண்ண....நானே டென்ஷன்ல இருக்கேன்...இவன் வேற..."என்று முறுமுறுத்து விட்டு....."சரி விடு ...நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு...இந்த கதிரும் அஞ்சலி எங்க...அவங்க போய் ரொம்ப நேரம் ஆச்சு...கதிர் வேற கோபத்தில இருந்தான்....எனக்கு பயமா இருக்கு....நீ எதுக்கும் ஒரு முறை கதிருக்கு போன் பண்ணி பாரேன் "என்று பயந்த குரலில் கூற...அவனுக்கும் மகி கூறுவது சரி எனப் பட்டது....

கதிருக்கு போன் செய்து விட்டு மகியிடம்..."டோன்ட் வொரி மகி அவங்க ஸ்டேஷன்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்...இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க..."என்று மகேஷ் கூறிய பின் தான் நிதானத்திற்கு வந்தால் மகி ...

💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖Where stories live. Discover now