பகுதி-15

1.4K 77 19
                                    


"யாரு நீ" என்று அடியாள் ஒருத்தன் கேட்டதும்

"அது வந்து இங்க வேலை தேடி வந்தேனுங்கய்யா"என்றாள் வசுவின் தங்கை பயத்துடன்

"ஓஹ் இங்க வேலை  எல்லாம் ஒரு மண்ணும் இல்ல வெளியே போ"என்று அந்த காட்டு கழுதை சொன்னதும் வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு

"அய்யா ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டபடுறேன் நீங்க தான்யா பெரிய மனசு பன்னி வேலை கொடுக்கனும்"என்றாள் கெஞ்சும் முகத்துடன்

"அட போமா"என்று அவன் கத்திக்கொண்டு இருக்கும் போதே

"டேய் அங்க யாரு?"என்று கத்தினான் புவன்

'இவன் பொம்புள மதம் பிடிச்சவன் தானே இவன் கிட்டயே போய்  கால்ல விழுவோம்'என்று வராத கண்ணீரை வர வைத்துக்கொண்டு

"அய்யா" என்று அழுதாள் அவனை பார்த்து

"இங்க வா"என்றான் தலையசைவில்

டக்கென ஓடிசென்று அவன் காலடியை தொட்டு

"சாப்பிட்டு ஒரு வாராமாச்சிங்கய்யா பிச்சைலாம் எடுக்குற குடும்பம் நான் இல்ல அதான் வேலை தேடி வந்தேன்ங்கய்யா பெரிய மனசு பன்னி வேலை கொடுங்கய்யா" என்று கெஞ்சி அழுதாள்

"இத பாருமா இங்க ஒரு குழந்தை  இருக்கும் அத பார்க்குறதுக்கு ஆள் தேவை குழந்தை  பார்த்துக்க முடியும்ன்னா வேலை தருவேன்"என்றதும் ஒரு நிமிடம் தன் தமக்கையின் நினைப்பும் குழந்தையின் நினைப்பும் வந்து விட 

"அய்யா நான் பன்றேன் அய்யா பூ மாதிரி பார்த்துப்பேன் வயிற்று பசிய போக்குங்கய்யா"என்றதும்

அவளை தொட்டு எழுப்பினான் அவளுக்கு உடலே கூசி போய்விட
எதையும் உள் நுழைந்து கொள்ளும் வரை  வெளிப்படுத்தாது  நின்றாள்

"உள்ள ஒரு வயசான பாட்டி இருப்பாங்க அவங்க கிட்ட போயி பேசு" என்று விட்டு சென்றான் அவன் சென்றதும் அவன் தொட்ட இடத்தை பார்த்து முறைத்து விட்டு

உள்ளே ஓடினாள் அந்த கிழவியின் கையில் குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்டவள் ஓடி சென்று தூக்கினாள்  அது சித்ராவே தான் பிறந்த அன்று பார்த்த அதே முகஜாடையுடன் இவளது கைக்கு வந்ததும் மை மறந்து சிரித்தாள்

குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)Where stories live. Discover now