என் கதையை படித்த என் அன்பு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.
உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைக்கிறேன் அதற்கான பதிலை தேடவேண்டியது நம் கடமை.
கொருர குணம் கொண்டு கொலை செய்தவனை கூட மன்னிக்கும் இந்த சமுகம் குண்டான பெண்களை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளிகளை புரிந்து கொள்ளும் சமுதாயம் இந்த பெண்களின் மனதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது.
சந்தானம், விவேக் போன்ற நடிகர்கள் இந்த பெண்களை பற்றி அவதூறு பேசுவது ஏன்?
அழிந்து வரும் கொடுர மிருகமான புலி போன்ற மிருகத்திற்காக இரக்கம் கொள்ளும் சமுதாயம் இப்பெண்களின் மனதினை காயப்படுத்துவது ஏன்?
பறவைகளின் எச்சிம் பட்டால் கூட அது ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என நம்பும் சமுதாயம் இப்பெண்களை அறுவெறுப்புடன் பார்பது ஏன்?
இவையெல்லாம் விட கொடுமை இந்த சமுதாய திருமண சந்தையில் யாரும் இப்பெண்களை ? சொல்வதற்கு மனம் குமுறுகிறது.தயவு செய்து மனதினை புரிந்து கொள்ளுங்கள் உடலை அல்ல
இப்பெண்களின் மனநிலை புரிந்து கொள்ளுங்கள்.
