அன்றைய பொழுது அனைவருக்கும் அழகாக விடிந்தது மஞ்சள் நிறக் காயை தவிர
தோட்டக்காரன் மருது அனைத்து காய்களையும் அறுவடை செய்தான் மஞ்சள் நிறக் காயை தவிர ஆம் அந்த மஞ்சள் நிறக்காயின் உருவம் அழகில்லை அது ஒரு காட்டுக்காய் என நினைத்து கொண்டே அனைத்து காய்களையும் ஊருக்குள் வியாபாரம் செய்ய எடுத்து சென்றான் மற்ற காய்கள் மஞ்சள் நிற காயை ஏளனம் செய்து கொண்டே சென்றன.
இவையனைத்தையும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்து மஞ்சள் நிறப்பூவம் அந்த மஞ்சள் நிறக்காயை பார்த்து நீ இருக்கும் செடியில் நான் பூத்ததால் என்னையும் யாருக்கும் பிடிக்கவில்லை என்று அந்த காய்யை திட்டியது
இதனால் மனமுடைந்த போன மஞ்சள் நிறக்காய் தன் செடியில் இருந்து தன் உருவத்தை பார்த்து வேதனை கொண்டு கதறி அழுதது