தன் விதியை நினைத்து அழுவதா இல்லை தன்னை படைத்தவனை நினைத்து அழுவதா என்று தன்னையே நொந்து கொள்வதா என்ன செய்வது என்று புரியாமல் மஞ்சள் நிற காய் குருபகவான் கோயிலுக்கு சென்றது
கோயில் நடைதிறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்றது கண்ணீர் விட்டு தன் உருவத்தை மாற்றும் படி கதறி அழுதது.
கோயில் முடும் போதுதான் வெளியே வந்தது. இது போல் வாரம் தவறாமல் ஒவ்வொரு ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருபகவானை காண சென்றது.
மனவேதனை அதிகரித்ததே தவிர பலன் கிடைக்கவில்லை. இறுதியாக 11 வது வியாழக்கிழமையும் வந்தது இன்றோடு அனைத்தும் பிரச்சினையும் முடிந்தது முடியாவிடில் அது தன் உயிரை மாய்த்து கொள்ள முடிவெடுத்தது அந்த மஞ்சள் நிற காய்கோயிலுக்குள் சென்றது குருவை வணங்கி அங்கேயே ஒரமாக அமர்ந்து கொண்டு குருவை வணங்கியது.
எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை திடிரென்று தன்னை யாரோ தொடுவது போன்ற உணர்வு ஏற்பட திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் அந்த குருபகவானே நேரில் வந்திருந்தார்.
அழகு நிறைந்த மஞ்சள் நிற காயே உன் உருவத்தை நினைத்து கலங்காதே பறை(இசைக்கருவி) போன்ற தோற்றத்தை நீ கொண்டிருப்பதால் இன்று முதல் நீ பரங்கிக்காய் என்று அழைக்கபடுவாய். நீ இருக்கும் செடியில் பூக்கும் மஞ்சள் நிற பூக்களை மார்காழி மாதம் வாசலில் போடுகின்ற கோலத்தை அலங்கரிக்க பயன்படும். அதே போல் வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகையில் சமைக்கும் காய்களில் நீ யே முதன்மை பெறுவாய்.
தன் உருவத்தை வைத்து உன்னை ஏளனம் செய்த பூசனிக்காய்,சுரைக்காய்,
புடலங்காய், இவை முன்றும் அமாவசையில் சமைக்கவும் தானம் செய்யவும் முதன்மை வகிக்கும். வேண்டாம் இறைவா என்னை ஏளனம் செய்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனை
அன்பு நிறைந்த பரங்கியே சொன்னது சொன்னதுதான் உன் நல்ல மனதிற்காக பீர்க்கங்காய்க்கு எந்த தண்டனையும் இல்லை. மற்ற முன்று காய்களும் சில விஷேத்திற்கும் பயன்படும் என்று கூறி மறைந்தார். பரங்கிக்காயக்கு அளவில்லா சந்தோஷம் ஆனந்த கண்ணீர் வடித்தது.