நிழல் ஒன்று

2.5K 74 162
                                    

" மணி ஏழாச்சு.. எழுந்திருச்சு காபிய குடிச்சிட்டு வேலைக்கு போற வழிய பாருடா.. எப்படி இழுத்துப் போத்திட்டு தூங்குது பாரு..
தெண்டம் ஷாக்ச எங்க போட்டு வெச்சிருக்கு .. வீடு மாறியா வெச்சிருக்கான் ..குப்பைத் தொட்டி தோத்து போயிரும்.. அவங்கப்பனுக்கு பையன் தப்பாம பொறந்திருக்கான்."

எல்லாருக்கும் வணக்கம்.  இவ்ளோ
மரியாதையா திட்டும்போதே என்ன தான் திட்டறாங்கனு தெரி்ஞ்சிருக்கும்..
உங்களுக்கு.. வாங்க என் வாழ்க்கைய பத்தி சொல்லுறேன்..

என்னைப் பத்தி நானே சொல்றதால்ல கொஞ்சம் பில்டப்தான் பண்ணுவேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. "

எங்களோடது மிடில் கிளாஷ் பேமிலி.. அப்பா போஸ்ட் மாஸ்டர்..
கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ரொம்ப சைலன்ட்.
அம்மா மீனாட்சி ஹோம் மேக்கர்..
பேருக்கேத்தமாறி எங்க வீட்ல மீனாட்சி சாம்ராஜ்யம் தான்..
எனக்கு சுமதின்னு ஒரு அக்கா இருக்கா.. இப்போதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு.
நான் அருண்..சைட் இன்ஜினியரா குப்பை கொட்டறேன்.. ஏன் அப்படி சொல்றேனு நினைக்கிறீங்களா.. பேருதான் சைட் இன்ஜினியர்.. ஆனா கொத்தனாருக்கு கொடுக்குற மரியாதை தான் எனக்கும்.. வெயில்ல வெந்து நூடுல்ஸ் ஆகாத குறைதான்..
சம்பளமும் சொல்லி்க்கற அளவு இல்ல.. உண்மைய சொல்லனும்னா எடுகேஷனல் லோனே இன்னும் நான் கட்டி முடிக்கல.

" டேய் அருண் இ்ன்னைக்கும் வரப்ப ஸ்வீட்டே வாங்கிட்டு வராத.. போன வாரத்துல வாங்கிட்டு வந்ததே இன்னும் ஈ மொச்சிட்டு இருக்கு.. இப்படியே போனா உங்கப்பா மாறி உனக்கும் சுகர் வந்துரும்.
உன் கல்யாணம் முடியற வரை வாயக்கட்டி இரு. "

ஆமாங்க எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க.. என்னை பகடகாயா வெச்சு அக்கா கல்யாணத்துக்கு வாங்குன கடன அடைச்சிட்டு ஜம்முனு செட்டில் ஆகனும்னு தான்  இப்போதைக்கு எங்கம்மாவோட சார்ட் டைம் கோல்..

" சரிம்மா. போயிட்டு வரேன்.. எதாவது வேணும்னா கால் பண்ணு.. பாய்.. " ன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டேன்..

உன் நிழலாக நான்Where stories live. Discover now