என்ன தான் நான் தைரியமா கிளம்பி வந்துட்டாலும் என் கையே டான்சாடி என்னைக் காட்டிக் கொடுத்துறும் போல.. பயந்துக்கிட்டே உள்ளே போனேன்..
அவளும் உள்ள இருந்தா.. இப்போலாம் அதிக வேலை இல்ல போல தகதகன்னு தங்கம் மாறி ஜொலிக்கறா.. கொஞ்சம் பூசுனாப்புல வேற தெரியுது.. இவ பக்கத்துல நம்ப பர்சானாலிட்டி கொஞ்சம் இடிக்குறமாறி இருக்குதே.. சரி சரி நானும் கருப்பு பேரழகன்தான்.. அதுனால பிரச்சினை இல்லன்னு மனச தேத்திக்கிட்டேன்..
நான் யாரோ மாறி கேசுவலா ஒரு சேர்ல உக்கார்ந்து ஒரு மாசா ஜூஸ் சொன்னேன்.. ( இனி இவ கடைல இவள நம்பி பச்சைத் தண்ணி கூட குடிக்ககூடாதுனு)..
ஒரு நடுத்தர வயசுள்ளவரு இந்த மழைக்காலத்துல காலங்காத்தால ஜுஸ் கேட்கறானேனு ஒரு மாதிரி பார்த்துட்டு கொண்டு வந்து கொடுத்தாங்க.. என்னோட உயிர்பயம் அவருக்கு எங்க தெரிய போகுது..சிரிச்சிக்கிட்டே வாங்குனேன்..
அவ நான் வந்தத கண்டுக்காம கூட ஏதோ புக்கு படிச்சிட்டு இருந்தா.. என்ன புக்னு பார்த்த உடனே எனக்கு செம கோபம் வந்திருச்சு.. என்னை கட்டுப்படுத்திட்டு ஜூஸ் குடிக்க ஆரம்பிச்சேன்..
ஏன்னா அவ படிச்சது பார்த்திபன் கனவு.. ஸ்கூல் படிக்கும் போதே இதை படிச்சு முடிச்சிட்டாளே.. இன்னுமா அதைப் படிக்குறா.. அந்தக் கதைல என்ன இருக்குமோ தெரியல.. எல்லாரும் ஹீரோவ பத்தி பேசுனா இவ மட்டும் ஹீரோயினோட அப்பா நரசிம்மவர்மன என் ஆளுன்னு கத்தி கத்தி சொல்லிட்டு இருப்பா.. அப்போ எனக்கு பெரிசா தோணல.. ஆனா இப்போ வெறுப்பேத்தி என்னை புலிகேசியா மாத்தாம
இவ விடமாட்டா போலயே..நானும் என்னால முடிஞ்சளவுக்கு ஸ்டைலா அவ முன்னாடி நின்னு 20 ரூபாய எடுத்துக் கொடுத்தேன்... அவ இப்போதான் என்னைப் பார்த்தா..
நான்தான்னு தெரிஞ்ச உடனே சுத்தி முத்தியும் பார்த்துட்டு " உள்ள உக்காரு.. உங்கிட்ட பேசனும் " னா..
என் காதலா அவ சொல்லாமலே புரிஞ்சிட்டாளா.. இல்லை அவளுக்கும் என்மேல காதலான்னு நினைக்கும்போது ஜிவ்வுனு இருந்துச்சு..