1

1.4K 114 502
                                    

கடல் நீர் உள் வாங்க இது சுனாமியின் அறிகுறியா?? என மக்கள் பீதியடைய.. அரசாங்கம் மீணவர்களுக்கு கடலுக்குள் செல்ல தடை விதித்தனர்.. கடலோர மக்கள் கடவுளை வேண்டியபடி இருக்க..

"ஐயையோ,. என்ன ஆதர் இது... சுனாமி வர போகுதா??" என வாசகர்கள் பீதியடைந்த படி கேட்க.. "ஆம்.. ஆம்.. வரப்போகிறது சுனாமி தான்.. ஆனால், நம் கதையில் வரும்    சில கதாபாத்திரங்களில் வாழ்க்கையில் வீச போகிறது" என கதாசிரியர் கூற.. பேச்சற்று படித்தார்கள் வாசகர்கள்😝..

"கடவுளே.. என் பொண்ணுக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்.. அவ கல்யாணம் நல்ல படியா நடக்கனும்.. அவளுக்கு எந்த குறையும் வந்திர கூடாது.. அவ கூடயே நீ நின்னு அவளை எப்பையும் பாதுகாக்கனும்.. அவளை கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சிக்கிறோம்.. இந்த கல்யாணத்துல எந்த தடையும் வராம நீ தான் பாதுகாக்கனும்மா" என கடவுளிடம் வேண்டிய படி இருந்தவளிடம் வந்த அஸ்வதி.. "என்ன சித்தி.. கடவுள் கிட்ட பெரிய அப்ளிக்கேஷன் போடுறா போலே.. பார்த்து பன்னு.  கடவுள் பாவம்.. அவரால முடிஞ்ச அளவு தான் உன் கோரிக்கைய நிறைவேத்துவாரு " என கூறினாள்..

"ஹேய்.. அஸு.. வாயாடி.. காலையிலேயே வந்துட்டா போல.. ரொம்ப அழகா இருக்கா டி.. பதினெட்டு வயசு பருவப் பொண்ணு மாதிரி பாவடை தாவணில" என கூறி அவளிர்க்கு சுற்றி போட்ட பார்வதியிடம்..
"ஐயோ.. பாரு.. எனக்கு இன்னும் பதினெட்டு ஆகலை.. நான் சின்ன பொண்ணு.. நெக்ஸ்ட் ஏர் தான் எனக்கு பதினெட்டு ஆக போகுது.. இப்பையே நீ என்னை கிழவியா ஆக்கிருவா போலயே" என கட்டிக்கொண்டு முகத்தை பாவமாக வைத்து கூறியவளிடம்..

"அட அஸூ மா.. நீ தானே எனக்கு கல்யாணம் பன்னி வைங்கனு நேத்து சொன்னியாம்.. இப்படி பொறுமையா வயசு போனா உனக்கு எப்படி கல்யாணம் பன்னி வைக்க முடியும்?? சீக்கிரம் வயசு போனா தானே சீக்கிரம் பன்னிக்கலாம்" என்றபடி வந்த நந்தினியிடம்.. "ஹோய் நந்த்ஸ்.. நீ வேற.. நான் ஹரீஷ் ராவத்த கல்யாணம் பன்னிக்கிறதா இருந்தா மட்டும் கல்யாணம் பன்னிக்கிறேன்.. ஏன் இப்பையே கல்யாணம் பன்னிக்கிறேன்" என கண்ணடித்த அஸுவின் காதை திருகியவள்.. "ஹேய்.. வேனி..  இங்கே வா.. தங்கச்சி.. தங்கச்சினு தலைக்கு மேலே தூக்கி வைச்சி கொண்டாடுவியே.. உன் வாழ்க்கையவே பறிக்க பார்க்குறா பாரு" என அப்பொழுது தான் அங்கே வந்த நீலவேனியிடம் கூறினாள் நந்தினி..

கணவருக்காகWhere stories live. Discover now