தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை
மறந்திடுமா உன்னில்
உயிரை துளைத்தேன்
இது கனவா
நிஜமா எண்ணம்
அலைமோதுதே
எதுவரையில் எனக்கிந்த
உயிர் வேதனைஅடுத்தடுத்து சடங்குகள் நடந்து கொண்டிருக்க.. "தன்னை சுற்றி என்ன நடக்குது?? வேனி ஃபோட்டோவ தானே பார்த்தோம்.. இந்த பொண்ணு யாரு?? இதை எப்படி தெரிஞ்சிக்கிறது?? எல்லாம் கை மீறி போயிருச்சி.. இனி எதுவும் செய்ய முடியாது.. ஆனால், இப்போ தெரிஞ்சிக்கிட்டே ஆகனுமே.. இங்கே இப்போ கேட்டு எல்லோரையும் ஏன் சங்கடம்பட வைக்கனும்??.. எல்லோரும் போனதும் கேட்டுக்கலாமா?? இல்லை.. இப்போ தெரிஞ்சிக்கலைனா நமக்கு தலையே வெடிச்சிரும்" என பலவாறு மனதில் போட்டு குழப்பிக் கொண்டவன்,. அப்பொழுது தான் தன் குடும்பத்தாரின் முகத்தில் இருக்கும் கலவரத்தை கவனித்தான்.. சரி.. சொந்தபந்தங்கள் சென்றதும் தெரிஞ்சிக்கலாம் என முடிவெடுத்தான்..
அதிகாலையில் அந்த ரம்மியமான சூழலில்
கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிற இடமான ஊட்டியில் வந்து நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய வேனி,.வழக்கமாக இரசிக்கும் இயற்க்கையை கூட இரசிக்க மனமில்லாமல் வேகமாக ஒரு ஆட்டோவை பிடித்து ஏறியவள்.. ஓட்டுனரிடம் முகவரியை கூறி அந்த ஃபேக்ட்ரிக்கு முன்னாள் இறங்கியவள் ஒரு பெரு மூச்சு விட்டாள்..
"என்ன மா நடக்குது இங்கே?? நீங்க என் கிட்ட வேற பொண்ணு ஃபோட்டோவ தானே காமிச்சிங்கே?? ஆனா, இது யாரு" என அமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாக கேட்ட ஹரீஷை பார்த்து நந்தினி மற்றும் அஸ்வதி விழித்தனர்..
நந்தினி, அஸ்வதி மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களும் விழிக்க..
"என்ன கல்யாணி இது?? அவன் பொண்ணு ஃபோட்டோவ பார்க்கலேனு சொன்னா?? இப்ப என்னன்னா பொண்ணு மாறிடுச்சுனு சொல்லுறான்" என மணி கேட்க.. "அது இல்லைங்க.. நான் பொண்ணு ஃபோட்டோவ அவன் கைல குடுத்துட்டு அவன் ரூம்ல போய் பார்த்தேன்.. அவன் ஃபோட்டோவ வீசிட்டான்.. அதான் பார்க்கலைனு நினைச்சிட்டு உங்க கிட்ட சொன்னேன்.. இப்ப தான் தெரியுது.. அவன் பொண்ணு ஃபோட்டோவ பார்த்திக்கிறானு" என கல்யாணி பயந்த படியே கூறி முடித்தாள்..
YOU ARE READING
கணவருக்காக
Non-Fictionபோராட்டம் மிகுந்தது தான் வாழ்க்கை ... பல துன்பங்கள் இன்பங்களை அவருடன் கடந்தேன்... அவரையும் மீட்டெடுப்பேன் என் காதலின் உதவியோடு.... இந்த கதையை என் வருங்காலத்திர்க்கு சமர்ப்பிக்கிறேன்.. (Date:14.02.2019)