2

701 86 271
                                    

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..

சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருக்க.. காலடி யோசை க்கூட பிறருக்கு விளங்காத வண்ணம் மூன்று உருவங்கள் வீட்டை விட்டு வெளியேறியது..

"அக்கா.. எனக்கு பயமா இருக்கு கா.. இதுலாம் தப்போனு பயமா இருக்கு.. வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய ப்ரச்சனை ஆகிடும் கா.. அதை விடு இதுனால  நம்ம வீட்டு மானமே போயிரும் கா" என பயத்துடன் கூறியவளிடம்.. "பயப்பிடாதே அஸூ.. அதெல்லாம் யோசிச்சா வேனி வாழ்க்கை என்ன ஆகுறது?? அவ சந்தோஷமா இருக்கனும்னு தானே இப்படி ஒரு முடிவு எடுத்தோம்.. நம்ம வீட்டுக்கு எதாவது ப்ராப்ளம் வந்தா அதை பெரியவங்க பார்த்துக்குவாங்க" என நந்தினி கூற.. "என்ன நந்த்ஸ் உளறுரே.. அவங்க எப்படி பார்த்துப்பாங்க.. நாம்ம செய்யுற காரியத்துனாலே அவங்க தலை குனிஞ்சி நிற்க போறாங்க" என அஸு கண்கலங்கினாள்..

இவர்கள் இருவரின் பேச்சை கேட்டு வேனி தடுமாற.. நந்தினியோ, "நீ எதையும் யோசிக்காதே வேனி.. பார்த்து பத்தரமா போ.. போய் இறங்கிட்டு எனக்கு ஒரு மெஸேஜ் பன்னிரு.. இங்கே எது நடந்தாலும் நான் உனக்கு சொல்றேன்" என ஊட்டி செல்லும் பேருந்தில் வேனியை ஏற்றி விட்டு வீட்டை விட்டு வெளியே போன தடமே இல்லாமல் வந்து படுத்தனர்..

"டேய்.. தடி மாடு.. எந்திரி டா.. நானே ரெடியாகி வந்துட்டேன்.. கல்யாணத்தை வைச்சிட்டு கும்பகர்ணன் மாதிரி தூங்குரா.. எந்திரி.. எந்திரி" என எழுப்பிய தாராவை.. "ப்ளீஸ் டோரா, தூங்க விடு.." என தூங்க சென்றவனை.. "நீ என் பேச்சை கேட்க மாட்டா.. உனக்கு உன் மருமகன் தான் சரி" என தன் மகனிடம் குனிந்து.. "டேய்.. குட்டி கண்ணா.. உன் மாமன நீயே எழுப்பி விடு.. நீ தான் அவனுக்கு சரி.. நான் போய் பாட்டியோட இருக்குறேன்" என கூறி கீழே  சென்றாள்..

கணவருக்காகWhere stories live. Discover now