அவள் வருவதை தூரத்தில் பார்த்த நாதன் அவள் அலுவகத்தை அடையும் முன் அவள் முன் நின்றான். அவனை பார்த்து கோவமாக முகத்தை திருப்பி அவள் செல்ல முற்பட அவள் கையை வேகமாக பிடித்து இழுத்து கொண்டு வெளியே சென்றான்.
"நாதன் கைய விடுங்க"
"உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?"
"உங்கள பிடிக்கும் நாதன் அது மரியாதை நிமித்தமா... நீங்க தப்பா நினைச்சிடீங்க..." அவள் கையை விட்டான்.
"ஏய் என்ன சொல்ற?"
"இனி பேச வேணாம், குறுஞ்செய்திலாம் அனுப்பாதீங்க."
அவன் முகத்தை திருப்பி கொண்டு "ம் சரி அத என் முன்னடி படி"
அவளும் எடுத்து படித்தாள்...
"உன்னை எனக்கு பிடிக்கும்... ஒரு சகோதரனாக உன்னை காக்க நினைக்கிறேன்... மோகன் எதோ கெட்ட எண்ணத்துடன் திட்டம் தீட்டியுள்ளான்... நீ நாளை அலுவலகம் வராதே..." படித்து முடிக்கும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தது. அவன் கரத்தை பற்றி கொண்டாள்.
அவள் பயந்து விட்டாள் என எண்ணி "சரி பாத்துக்கலாம் அழுவாத"
"முழுசா படிச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்... மன்னிச்சிருங்க ண்ணா..."
"அவசரமா அனுப்புனது மா அது முதல் வரிய பாத்துட்டு தப்பா நினைச்சிருப்ப. சரி விடு..." இருவரும் அலுவகத்துக்கு சென்றனர்.
அலுவலகத்திற்குள் சென்று அவள் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து நாதனின் இருக்கையை எட்டி பார்த்தாள் அங்கு அவன் எதோ இறுக்கமாக எதோ சிந்தித்து கொண்டிருந்தான். அதை கண்டு அவளும் சிறிது பதற்றம் அடைந்தாள். பலமுறை எட்டி பார்த்தும் அவன் பார்க்காததால் பொறுமை இழந்து சிறு காகித உருண்டையை எடுத்து அவன் மீது வீச அவன் யோசித்து கொண்டே நிமிர்ந்து பார்த்தான். "என்ன" என்பது போல் அவள் முகத்தை கீழிருந்து மேல் நிமிர்த்தி கேட்க்கும் போது அவள் கண்கள் சிவந்திருந்தன அவனை பார்க்கும் போது கலங்கியும் இருந்தன, அவள் தைரியமான பெண்தான் இருந்தாலும் பெண் என்றாலே மேன்மையும் மென்மையும் தானே அந்த மென்மை கண்ணீரை சிந்துவது தான் அதன் பிரதான தொழில்... அன்பானவர்களிடம் ஆனந்த கண்ணீர் கொடுமையானவர்களிடம் வலியுடன் கண்ணீர். அவள் முகத்தை பார்த்தவன் அன்பான புன்னகையை சிந்தி "நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன்" என்பதாக அவன் நெஞ்சத்தில் கை வைத்து செய்கை செய்ய, அவளும் நம்பிக்கையாக கண்களை துடைத்துக் கொண்டு அமர்ந்து தன் பணிகளை செய்ய தொடங்கினாள்.