சரவணன் தான் இறுக்கமான முகத்துடன் காமனிடம்(காமராஜ்) வந்து...
"கல்யாண பண்ணுறதுக்கு முன்ன இப்படி நடந்துக்குற வெக்கமா இல்ல உனக்கு?"
"எப்படி நடந்துக்கிட்டேன்?"
"அந்த அறையில சொல்ல நாக்கு கூசுது."
"முன்னாடியே வந்துட்டிங்களா? சரி கேளுங்க மாமா, ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி போனா கூட அவ புருஷன் தன் கண் முன்ன தன் பொண்ணு கிட்ட நெருங்கினா ஒரு அப்பாவுக்கு கோவம் வரும் இது இயற்கை... உங்க பொண்ண விரும்புறேன்னு நா எப்போ தெரிஞ்சிக்கிட்டேனோ அப்போ அவ மேல உரிமை எடுத்துக்கிட்டேன்... அவளும் என்ன விரும்புறான்னு தெரிஞ்சப்போ என் மனைவியாவே ஏத்துக்கிட்டேன்... என்ன நா தொடுறது அசிங்கமாவோ முறைகேடாவோ தோணல... புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க..."
"திருடன் எல்லாரையும் பேசியே கவர்ந்திடுவான்..." அபி சிவகாமி காதில் ஓத இரு பெண்களும் சிரித்து கொண்டனர்...
அப்போது தான் ராஜாவின் அம்மா மாதவி உள்ளே வந்தார் "டேய் தம்பி கேட்டியா விசயத்த உங்க அலுவலகம் பக்கத்துல ஒரு பொண்ண கொன்னு போட்டாங்களாம்." என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவர் மிரண்டு போய் அபியை வைத்த கண் வாங்காமல் பார்க்க, புரிந்து கொண்ட ராஜா
"இந்த பொண்ணு படத்தை தொலைக்காட்சில பாத்திங்களா?"
"ம்ம்ம்ம்ம்....."
"இவ தான் உங்க மருமக இவங்க உங்க சம்மந்தி..." என்று அறிமுகம் செய்ய...
தன் மருமகள் அருகில் போய் "அவங்க அப்பாவ எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலயே" என்று சொல்ல...
சிவகாமி "அதெல்லாம் மாப்ள பேசியே சமாளிச்சிருவாரு... இப்போ தான் நிரூபிச்சாரு" என்று சரவணன் முகத்தை பார்க்க அவர் புன்னகைத்து கொண்டார்... "உங்களுக்கு என் மகளை பிடிச்சிருக்கா?"
"சாமி செல மாதிரி இருக்கா பிடிக்காம போகுமா? ராசாத்தி சிரிச்சா போதுமே இந்த வீடே பிரகாசிக்குமே!" என்று கூறி அபியின் நெற்றியில் முத்தமிட அபி ஆனந்த கண்ணீருடன் அவள் அத்தையின் பாதத்தை தொட்டு ஆசிர்வாதம் பெற்றாள். ராஜா அபியின் தொலைபேசியில் பேசிக் கொண்டே வெளியில் வந்தான்...
"அமீர் உங்க தோழிக்கு ஒன்னும் ஆகல பத்திரமா இருக்கா நா சொல்ற முகவரிக்கு வாங்க..."
செய்தி வாசிப்பாளர் தொலைக்காட்சி பெட்டியில் "பிரபல தொழிநுட்ப அலுவலகத்தில் பணி புரிந்த அபி எனும் இளம்பெண் மாயம் கடத்திக் கொன்றதாக தகவல். அந்த நிறுவனத்தில் பணி புரியும் மோகன் என்பவரை அந்த பெண்ணின் தோழர்கள் அடி உதை... காவலர்கள் மோகனை காப்பாற்றி கைது செய்தனர்." அபி விறைத்து நின்றாள்...
சிறிது நேரத்தில் அமீர், நாதன், மற்றும் அவள் பிற தோழிகள் தோழர்கள் அனைவரும் ராஜாவின் வீட்டை அடைந்தனர் அபி ஓடி சென்று அனைவரையும் தழுவி கொண்டு அழ தொடங்கினாள்.
அமீர் "என்னடி ஆச்சி எப்படி இங்க வந்த?"
"இவரு தான் ராஜா எனக்கு உயிரை கொடுத்தவரு..." அவள் இதழ்கள் பேச மறுத்தன...
ராஜா "எப்படி அவனை புடிச்சீங்க அமீர்?"
அமீர் இரவு அபியை வீட்டுக்கு தேடி போக அவள் அங்கு இல்லை அவன் ஒரு பக்கம் சரவணன் ஒரு பக்கம் தேடி அலைய சிறிது நேரத்தில் அவள் நட்புகள் மொத்தமும் அந்த ஊரையே அளந்து கொண்டிருந்தனர் அமீர் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜானி வந்து அவன் வண்டியில் இடித்து இருவரும் கீழே விழ ஜானியின் தொலைபேசி தேய்த்துக் கொண்டு அமீரிடம் வர அதில் அபி அவனை பார்த்து கொண்டிருந்தாள்... அவனை கட்டி இழுத்து போய் அடித்து விசாரிக்க அவன் மோகனை காட்டிக்கொடுத்தான் ஆனால் அவனுக்கும் அபியின் நிலை தெரியாததால் அவனையும் ஊடகங்களையும் அழைத்து கொண்டு அலுவலகத்திற்கு செல்ல அங்கு மோகன் தன் அறையில் இருந்த இருக்கையில் படுத்திருந்தான் அமீர் அவனை "அபி எங்கடா" என்று சொல்லி தாக்க நாதனும் களத்தில் இறங்கினான் "அவள காப்பாத்த எவ்ளோ முயற்சி செய்ஞ்சேன்... பாவி அவள என்ன டா பண்ணுன?" என்று சேர்ந்து மொத்த சிறிது நேரத்தில் காவலர்கள் அங்கு வந்து மோகனை கைது செய்தார்கள்... சொல்லி முடித்ததும் சிவகாமி பஞ்சும் டிஞ்சுரும் எடுத்து வந்து அமீரின் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டே "அபி நீ கொடுத்து வச்சவ டீ...." என்று சொல்லி கண்கலங்க... அபி தன் வாழ்க்கையில் அடுத்த பகுதிக்கு சென்றாள்....
-சுபம்-