அபி

1.6K 13 1
                                    

"ஏங்க இப்படி பண்றீங்க? சீக்ரம் சாப்பிட்டு வேலைக்கு கிளம்புங்க" சிவகாமி... பொறுப்பான, அன்பான, அக்கறையுடன் குடும்பத்தை நடத்தும் பம்பர பெண்மணி சூழநின்று வீட்டுவேலைகளை கவனிப்பதால்...

"இன்னைக்கு சந்திப்பு(meeting) இருக்குடீ அதான் powerpoint பண்ணிட்டுருக்கேன்" சரவணன்... 'அபி constructions' என்று சொந்தமாக கட்டிட கட்டுமான அலுவலகம் வைத்து நடத்துகிறார்... சாந்தமான மனிதர் பொறுமையுடன் யோசித்தது எதையும் செய்யும் திரமைசாலி... இவர் துறையில் இவர் ராஜா...

"ராத்திரி 'mi' பக்கலன்னு டாம் கிரூஸ் அழுதானா?.... ராத்திரி பூரா படம் பாத்துட்டு இப்போ உக்காந்து அவசரமா powerpoint பண்ணுனா எப்படி நல்லா வரும்? தலையே இப்டி இருந்தா வாழ் எப்படி இருக்கும்? நீங்களே தாமதமா போனா மத்தவங்க எப்படி சரியா வேல பாப்பாங்க?"

"மேலாளர் ராகவ் கவனிச்சுக்குவாரு தங்கம் நீ கோவப்படாத!"

"அது உங்க பொறுப்பா? ராகவ் பொறுப்பா?"

"'இவ நம்மையும் வேல பாக்க விட மாட்டா' தங்கம் அபி என்ன பண்ணறா? நா இன்னும் அவள பாக்கலையே!"

"அப்பாவுக்கு பொண்ணு தப்பாம பொறந்துருக்கா சோம்பேறி கழுத இன்னும் படுக்கைலருந்து எழல" சொல்லி கொண்டே அபியின் அறைக்கு செல்ல,

"ஹப்பா நாம தப்பிச்சோம்" என்று பெருமூச்சை விட்டு தன் பணியை தொடர்ந்தார் சரவணன்.

அறையில் குப்புற படுத்து தூங்கிக்கொண்டிருந்த அபியை "எழுந்துரு டீ நேரமாச்சி கல்லூரிக்கு போகணும் உங்க அப்பா மாதிரி அது ஒன்னும் உன் கல்லூரி இல்ல நீ படிக்கிற நினைப்பிருக்கா?" என்று பல வசனங்கள் பேசியும் எதிரில் பயனற்று போக, "தூங்குமூஞ்சி கழுத" என்று கையை சுழற்றி அபியின் பின்ன பகுதியிலேயே வைக்க, 

"அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா..." என்று சிலும்பி கொண்டு எழுந்தாள் அபி... பூலோக தேவதை சரவணன்-சிவகாமியின் ஒரே புதல்வி, பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறாள்... அதிக நட்புகள் ஆண்-பெண் வரைமுறை கிடையாது. சிவகாமி ஒருமுறை பசங்க கூட பாத்து பழகுமா என்று சொன்னதற்கு,

"பாத்தா பாக்க மட்டும் தான் மா முடியும் பழக முடியாது 'நம்பிக்கை அதானே எல்லாம்' சரியா?" என்று சொல்லி அழகாய் சிரிக்க,

"சொல்றத சொல்லிட்டேன்... பேசு பழகு ஆனா வெளில சுத்துனன்னு தெரிஞ்சிச்சுனா நீ என் மறுரூபத்தை பாப்ப..."

"அம்மா பசங்க பாக்குற பார்வையிலேயே எப்படி பாக்கறாங்கனு தெரிஞ்சுரும் மா... கவல படாதீங்க என்ன நம்புற மாதிரியே என் நண்பர்களையும் நம்புங்க" என்று அந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது... அதிலிருந்து கல்லூரி வீடு எல்லா இடத்திலும் நட்புகள் படை சூழ பவனி வந்தாள் அபி எனும் அபிநய சுந்தரி...

காமனின் காதல் #JaaneDeMujheDonde viven las historias. Descúbrelo ahora