மோகன் அந்த அலுவலகத்தில் 10 வருடங்களாக பணிபுரியும் குழு அதிகாரி (team leader) திருமணம் ஆகி இரண்டு வாரிசுகள் இருக்க, இவன் காம களியாட்டங்கள் கணக்கில் அடங்காதவை இவனை போல் உத்தமன் இல்லை என நம்பும் மனைவி வீடு திரும்பியதும் மேலே தொத்தி விளையாடும் மக்கள் என எல்லாம் கிடைத்தும் கிடைக்காத எதோ ஒன்றை தேடி பல பெண்களை நாடும் பேடி.
அந்த அலுவகத்தில் பணிக்கு அமரும் எந்த பெண்ணையும் இவன் கணைகள் தீண்டாமல் இருந்தது இல்லை சில பெண்கள் மறுக்காமல் அடிபணிந்து விட, மறுத்தவர்கள் இவன் மிரட்டலுக்கு ஆளாவார்கள். "விருப்பம் இல்லாம தொட்டு ருசி பாக்க விருப்பம் இல்ல. இனி நா இத பத்தி பேச மாட்டேன். நீ யார்கிட்டயாவது பேசுனா நீ மட்டும் இல்ல உன் குடும்பமே இருக்காது புரிஞ்சுதா?" என சொல்லி விட்டு விடுவான் பின் அலுவலக பணிகள் அதிகம் குடுத்து அதிக நேரம் வேலை வாங்கி இன்னும் சில தொல்லைகள் தந்து அவர்களாக பணியை விட்டு செல்லும் படி செய்து விடுவான்.
இருந்தும் அலுவலத்தில் எப்படி தெரியாமல் போகும்? அனைவருக்கும் தெரியும் இவன் செயல்கள். அத்தனையும் தெரிந்தும் ஒன்னும் செய்ய முடியாமல் இருந்தார் நாதன் காரணம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சந்துரு வின் மகன் தான் இவன் 'புலி எட்டு ஆதி பாஞ்ச குட்டி பதினாறு அடி பாயும்' இந்த பழமொழியை பொய்யாக்க வந்தவர்கள் இந்த தந்தை மகன். மோகனிடம் உள்ள ஒரு பண்பு மட்டும் அவன் தந்தையிடம் இல்லை அந்த நேரத்தில் இடையூறு இல்லாமல் பெண்களை அனுபவிக்க நினைப்பவன் மோகன். அவன் தந்தை அவனுக்கு செய்யும் உபதேசம் என்னவென்றால் "வேட்டையாடி சாப்பிட்டு பாருடா மகனே அதோட ருசியே தனி."
"ஒவ்வொருத்தரோட ரசனையும் வேற வேற நீ உன் வேலைய பாரு."
"ஹூம் நல்லதுக்கு காலம் இல்லடா."
அலுவலகத்தில் சேர்ந்து கொஞ்சம் நாட்களில் மோகனின் பார்வையையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாள் அபி... அவனை எவ்வளவு தொலைவில் வைக்க வேண்டுமோ அவ்வளவு தொலைவில் வைத்தாள். கல்லூரியில் கண்ட சில மனிதர்களை வைத்து இவனையும் எடை போட்டு விட்டாள் பேதை... இந்த மிருகத்தால் அவள் வாழ்வில் சந்திக்க போகும் இன்னல்களை அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.