இவர்களின் அட்டகாசம் கண்டு தயா கத்த தொடங்கியதுமே வெளியில் வந்த அனைவரும் இதை கண்டு வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றிருந்தனர்....
எல்லாரும் அவர் அவர் வேலை பார்க்க சென்றனர்... நம்ம ஆளுங்களும் அவங்க அவங்க வேலைய பார்க்க போனாங்க வேற ஒன்னும் இல்லை அவங்க ஆளுங்க கூட மொக்க போட தான்... ஏதோ நாளைக்கு இந்த உலகம் விடியமே இருந்திட போற மாதிரி எல்லாம் செல்ல.... அதை பொறுக்க முடியாத தயா நேரே கதிரவனிடம் சென்று அப்பா இது உங்களுக்கே சரியா படுதா நாளைக்கு காலைல கல்யாணம் வச்சுக்கிட்டு இப்படி பொண்ணு மாப்பிளை ஒரே இடத்துல விட்டுருக்கீங்க யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க என கேட்க... கதிரவன் சட்டென தன் மகனுக்கு அழைப்பு விடுத்து இங்கு வருமாறு கூறினார்.. தான் மட்டும் தன் துணையை பிரிந்து போக வேண்டுமா என நல்லுள்ளம் கொண்ட சிபி.... ஒரு அழைப்பு விடுத்தான் டேய் தனா இங்க வா என கூப்பிட்டு அவனையும் அழைக்க.. நண்பன் ஏன் இப்போது அழைக்கிறான் என புரியாமல் சாக்க்ஷிமா வா கிழ போலாம் நீ மித்ரா கூட பேசிட்டு இரு நான் வரேன் என கூறி அவளை அங்கே போக சொல்லிவிட்டு இவன் நண்பனை காண சென்றான்.. அங்கே சாக்க்ஷி முன் மதி வந்து மித்ராவுடன் பேசி கொண்டிருந்தாள்.. தனாக்கு மட்டும் இல்லை ராஜுக்கும் இதே நிலைமை தான்...
நிசப்தமான
இரவில்
மனம்
கவர்த்தவர்களோடு
நாளை
காலை
வேலையில்
மாலை
மாற்றும்
முன்
தன்
இணையோடு
அந்நாள்
விடியல்
வரை
பேச
தவிக்குமே
காதல்
கொண்ட
நெஞ்சங்கள்...இப்போது நண்பர்கள் அனைவரும் கும்பலாய் அமர்ந்து பேச தொடங்கினர். மனம் இப்போது தான் ரொம்ப லேசாக இருந்தது ஒரு ஜீவனுக்கு வர யாரும் இல்ல நம்ம தயாக்கு தான்.. சாக்க்ஷி இங்கு புதிதென்பதால் பேச கொஞ்சம் தயக்கமாய் அமர்ந்திருந்தாள் இதை கவனித்த மித்ரா மதி இருவரும் அவளிடம் பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.. சாக்க்ஷி மித்ராவிடம் நீ சிபியா எப்போ காதலிக்க தொண்டங்கின என கேட்க.. தன்னவன் பற்றி கேட்கவும் முகம் சிவந்தாள்... அதை மறைக்க முடியாமல் திணறினாள்.. பின் தன்னை நிலை படுத்திகொண்டு கூற தொடங்கினாள்.. (பிளஷ்பக் மேல போறேன்... இல்லை கிழ போய் படிக்குறேனு நெனச்சுடாதீங்க )அவள் கூறி முடிக்கவும் சாக்க்ஷி மதி சிரிப்பு கட்டு படுத்த முடியாமல் சிரித்தனர்... அப்படி என சொல்லிருப்பானு யோசிக்குறீங்களா அத தான் நானும் யோசிக்குறேன் அப்பறமா கேட்போம் இப்போ நம்ம மதி ராஜு லவ் பார்ப்போம்..
YOU ARE READING
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது )
Romanceதீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அ...