உறவு 15

2.7K 139 74
                                    

தன்னுயிர்த் தோழியின் சிரிப்புக்கு காரணம் எதுவாகினும் அது அவளுக்கும் பிடித்தமானதாகி விடும்.. அவ்வகையில் அவள் தோழிக்கு ஆதரவாக இருக்கும் ஒரே உயிரையும் அவளுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை..
அவனை நல்ல மனிதனாக, சிறந்த பாதுகாவலனாக, அடுத்தவர் குறை தீர்க்கும் ஆபட்பாண்டவனாக தெரியும்.
ஆனால் அவனை காதலனாக எண்ண எப்போது தோன்றியதென்று பேதை நெஞ்சுக்குத் தெரியவில்லை.. காரணத்துடன்தான் காதல் வரவேண்டுமா என்ன?அவனைப் பார்த்தாலே மனதில் தோன்றும் மகிழ்ச்சிக்கு காரணமும் புரியவில்லை! இதன் விடை காதல் என்பதை ஆண்டுகள் கடக்க அவளே புரிந்து கொண்டாள்.

அவன் ஆணழகன் என்பதைக் காட்டிலும் அவனின் பொறுமையும் பத்து வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒற்றை வார்த்தையை பதிலாய் உரைத்து அனைவரையும் அதற்கு கட்டுப்பட வைக்கும் அவனது சாதூர்யமும் தான் அவனை இன்னும் நேசிக்க வைத்தது..
பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கும் கனியின் முகத்தை வைத்தே அவன் சுலபமாக கண்டுபிடிப்பதை முதலில் அதிசயமாக நோக்கினாலும் அவனை உற்று நோக்கிய பி்ன்புதான் அவனும் தாய்ப்பாசத்திற்கு ஏங்குகிறான் என்பதை கண்டுகொண்டாள்..

அவனுக்கு யாவுமாக இருக்க ஆசைப்பட்டது இவள் காதல்மனம். ஆனால் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைந்ததில்லை.
எத்தனை நாள் அவன் ஊரிலிருந்து வருகிறான் என தெரிந்ததும் கனியின் வீட்டு வாசலிலே வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.. ஆனால் அவளுக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம் மட்டும்தான்.. ஏனெனில் அவனுடன் எப்போதும் அட்டைப் பூச்சியாய் ஐசுவும் அவனுடன் தொற்றிக் கொண்டே வருவாள்.. அதனாலே எப்போதும் துளசி ஐசுவைக் கண்டால் சீரியல் வில்லியைப் போல முரைத்துக் கொண்டே செல்வாள்.. அவள் ஐசுவை எதிரியாக நினைத்தைப் போலவே அவர்களின் திருமணமும் நிச்சயிக்கப்பட நொந்து போனாள்..
.அவனிடம் முறையாக தனது காதலை சொல்லி ஒப்புதல் பெறும் வயதும் தனக்கில்லை என்பதையும் அறிந்தவளால் நடக்கும் அவனது திருமணத்தை நிறுத்தக் காரணம் தெரியவில்லை..

உயிரோடு உறவாட ( முழுக் கதை)Where stories live. Discover now