உறவு 26

2.7K 136 113
                                    

அவள் பயந்தவாரே நிற்க " உங்கி்ட்ட கொஞ்சம் பேசனும் கொஞ்சம் வெளிய போலாமா ? " என்று கதிர் அதிகாரமாக கேட்க துளசிக்கு அவன் கூறுவதை நம்ப முடியவில்லை.. தாமதமாக சென்றால் விடுதிக் காப்பாளாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.. அதுவும் கதிருடன் தனியாக செல்ல கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்த பயம் அவன்மீது சந்தேகத்தினால் இல்லை. எங்கே அவன் திட்டிவிடுவானோ இல்லை தன்னை மறந்துவிடு என கட்டாயப்படுத்துவானோ என்கிற பயம்தான்..

அவள் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருக்க " அபிக்கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்.. என்மேல நம்பிக்கை இருந்தா வா " என உறுதியாக சொல்லிட அவளும் வருவதாக சம்மதித்தாள்.

வண்டியில் செல்லும் வரையில் கனி மாட்டிக் கொண்டுவிட்டாளோ.. எதற்காக தன்னிடம் பேச நினைக்கிறான் என புரியாமல் யோசித்துக் கொண்டே வந்தாள்..
இருவரும் கல்லூரிக்கு ஒரு மைல் தள்ளியுள்ள தேநீர் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்..

எதையும் சுற்றி வளைக்க விரும்பாமல் பேச்சை ஆரம்பித்தான் கதிர்.
" துளசி படிப்பெல்லாம் எப்படி போகுது? " என்றான்.

அவன் என்ன கேட்பானோ என்று பயந்திருந்தவளுக்கு  இந்தக் கேள்வி சற்று நிம்மதியைத் தர
பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்..அவளது பதிலில் அவனது கை முஷ்டிகளை இறுக்குவதைப் பார்த்ததும் பயத்தில் எச்சிலை முழுங்கியவள் வாயைத் திறந்து " நல்லா போகுது .. நெக்ஸ்ட் வீக்ல இருந்து செமஸ்டர் ஸ்டார்ட் ஆகப் போகுது " என்றாள்..

" பிரேபேர் பண்ணியாச்சா ? " அதே கோபத்தில் கேட்க,

" ஹூம் பண்ணிட்டேன் " என்று அவள் கூறி முடிக்கும் முன்பே " ஹோ இதான் நீங்க பிரீபேர் பண்ண இலட்சனமா" என தனது அலைபேசிக்கு வந்த துளசியின் மதிப்பெண்களைக் காண்பித்தான்.

" நீ என்ன நினைச்சிட்டுருக்க துளசி.. உன்னோட மார்க் லாஸ்ட்  ரிவிசன்ல அப்டியே டௌனாகிருக்கு.. இதுக்கும் நீ எவ்ளோ பிரிலியன்ட் ஸ்டூடண்ட்.. உனக்கு படிக்குற வயசுல அப்படி என்ன பிரச்சனை.. இதுவே கனியா இருந்தா கண்டிப்பா நான் கேட்டிருக்க மாட்டேன். அவளால அவ்ளோதான் முடியும்..அதுவும் அவளுக்கு லைபோட சீரியஸ்னஸ் சுத்தமா தெரியாது.. ஆனா நீ அப்படி இல்ல.. உங்க அம்மா படற கஷ்டத்த பார்த்து பார்த்து வளர்ந்தவ.. எனக்கு உன் மார்க்ஸ் பார்க்கிறப்ப எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.. என்னால தான் நீ இப்படி மாறிட்டியோனு குற்ற உணர்ச்சியா இருக்குமா" என்று கோபப்பட்டவன் " சரி என்ன பிராபளம் சொல்லு.. படிக்க முடியலையா.. இல்ல படிக்க பிடிக்கலையா " என்று கேட்கவும் அவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..

உயிரோடு உறவாட ( முழுக் கதை)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon