1

20.6K 200 13
                                    

12th june,2019

காலை‌ சூரியனின் கதிர்கள் பூமியை நினைக்க அதன் அழகை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு கார் புயல் போல் பறந்து கொண்டிருந்தது. அதன் உள்ளே கொழுந்து விட்டு எரியும் தீப்பொறியாய் அமர்ந்திருந்தான் ஆதித்யா என்னும் ஆதித்யநந்தன். ஆதித்யா ஆரடியில் அழகும்,அறிவும் , திறமை வாய்ந்த தொழிலதிபர். 26 வயதே நிரம்பிய ஒரு ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம் கொண்டவன் என்றே கூறவேண்டும். தனது இளங்கலை பட்டத்தை முடித்தவுடன் முதுகலை பட்டத்திற்காக வெளிநாடு சென்று விட்டான். மூன்றாண்டு காலம் முடிந்து அவன் வீடு திரும்பியதும் அவனின் தொழிற்திறனை கண்டும், முடிவெடுக்கும் திறமையைக் கண்டும் அவன் தந்தை ஆன வாசுதேவன் ஆதித்யா அன்ட் கண்ஷ்டிரக்ஷன்சை அவனிடமே ஒப்படைத்து ஓய்வும் பெற்று விட்டார். தன் குடும்பத்தை நேசிப்பவன்,அம்மாவின் செல்லக்குட்டி பின்ன இருக்காதா குழந்தை வேனும்னு அவங்க அலையாத கோயிலே இல்லையே. வாசு - சுசி இரண்டுபேருக்கும் கல்யாணம் ஆகி எட்டு வருடங்களா குழந்தையே இல்லாம‌ தான் இருந்தது. பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்தான் ஆதித்யா. அதன் பின் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன.

குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அளவுகடந்த பாசம் ஆனால் வெளியாட்களை தள்ளியே நிறுத்திவிடுவான்.கோபத்துல அவனை அடக்க யாராலையும் முடியாது. அவன் தாய் சில சமயம் சமன்செய்து விடுவார் பல சமயம்‌ நடக்காமல்‌ போவதும் உண்டு.அவனிடம்‌ பேசி‌ ஜெய்க்க முடியாதுன்னு ஏ விட்ருவாங்க. எந்த பொண்ணுகிட்டயும்‌ அவனா போய் பேசுனதே கிடையாது அவன் மொறைக்குறத பாத்து‌ பயந்தே‌ எந்த பொண்ணும் பக்கத்துல கூட வராது அப்டியே வந்தாலும் நம்ம ஆளு  திட்ரதுல அடுத்த தடவ அப்டி பன்னனூனு கூட நினைக்க மாட்டாங்க. பலர் தூரத்தில் இருந்தே அவனை ரசித்து செல்வதும்‌ உண்டு (வேற என்னங்க பண்றது அதான் மொறச்சே பயமுருத்துரானே)

இன்று காலை‌ எழும்போது‌‌ ஏனோ ஆதிக்கு சொல்ல முடியா சந்தோஷம். தனக்கு கிடைக்க வேண்டியது தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான். அது ஏன் என்று புரியாவிடினும் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. புத்துணர்ச்சியுடன் ஆபிஸிற்கு கிளம்பி கொண்டிருக்கும் போது வந்த போனில் வாடிய முகம் பின்பு தீயென எரிய ஆரம்பிக்க இதோ புயலென தன் ஆபிஸிற்கு பயணித்துக் கொண்டிருக்கிரான். ஆதி பின்னிருக்கையில் அமர்ந்திருக்க முன் பக்கம் அவனது பிஏ ரவி மற்றும் ஓட்டுநர் இருக்க வேகத்தடையைக்கூட பொருட்படுத்தாமல் சென்றனர்.மூவரும் அவரவர் யோசனையில் மூழ்கி இருந்தனர். அது ஒன்னுமில்லங்க ஆதி அந்த ஃபோன்ல கேட்டத பத்தியும் நம்ம ரவி இவரு எப்ப கத்த போறாரோ எப்டி சமாளிக்க போறேனோ னு நினச்சுட்டு இருக்கப்போ டிரைவர் சடன் பிரேக் போட்டதில் இயல்புநிலை திரும்பினர்.

எதுவும்  உனக்காக...💞 ✓Where stories live. Discover now