ஆதி சென்ற மீட்டிங் முடிவில்லாமல் நீல பொறுமையாக கையாண்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது என்று தோன்ற கிளம்பி விடலாம் என்று முடிவே எடுத்துவிட்டான். இடையில் அவள் முகம் வேறு தன் மனதில் வந்து வந்து சென்றது. 'ரவி நெக்ஸ்ட் வீக் மும்பை போறதுக்கான எல்லா அரேஞ்மன்ட்ஸூம் செஞ்சிறு' என்று கூறிவிட்டு தன் காரை நோக்கி விரைந்தான். போகும் இடமுழுதும் அவள் முகமே சூழ தனக்கு வணக்கம் கூறும் எந்த நபரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை. வேகமாக காரில் ஏறி அமர்ந்தவன் 'சே என்ன ஆச்சு எனக்கு! ஏன் இப்படி அவ முகமே ஞாபகம் வருது!! இதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே இல்லையே. என் பின்னாடி வந்த பொண்ணுங்கள கூட நான் தான விரட்டிருக்கேன், அப்ப கூட எனக்கு எதுமே ஆனதில்லையே இப்ப மட்டும் என்ன??? அவ யாருன்னு கூட தெரியாது ..ஏதோ ரோட்ல குழந்தைகளுக்காக சண்டை போட்டா அவளோ தான்.இனி அவள பாக்கபோறது கூட இல்ல ஆதி.' என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.சுகி' வா கண்ணா சாப்பிட எதாச்சும் கொண்டு வரவா??? ஏன் ரொம்ப டயர்டா இருக்க?' என்று கேட்க ஆதி ஆமாம்மா ரொம்ப டயர்டா இருக்கு.நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா என்று அவர் மடியில் தலை சாய்ந்த படி கூற அவரும் அவன் தலை முடியை கனிவோடு கோதிநார். 'என்னாச்சு கண்ணா??' அது ஒன்னூல மா காலைல இருந்து ஒரே மீட்டிங். நெக்ஸ்ட் வீக் ஒரு புது பிராஜெக்ட்காக மும்பை போறேன்மா.'சரி ஆதி , நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா' என்று கூற என் கிட்ட ஏன் இப்படி பெர்மிஷன் லா கேக்குறீங்க!சொல்லுங்கமா என்றான். ' உனக்கு கல்யாணம் பண்ணனு ஆசபட்ரேன்' அவர் கூறியதில் சட்டென்று அவளின் முகம் வந்த செல்ல நான் கொஞ்சம் யோசிக்கனும்மா என்று தன் அறைக்கு சென்று விட்டான்.
ஆதியோ கட்டிலில் சென்று அமர்ந்தவனுக்கு உறக்கம் வருவதாயில்லை. தலையே வெடித்து விடும் போல் இருந்தது.' யாருடி நீ?? ஏன் இப்படி என்ன இம்ச பன்ற?? உன்ன பாத்து முழுசா 24 மணிநேரம் கூட ஆகல, அதுக்குள்ள என் மனசு பூரா ஆக்கிரமிச்சுட்ட. அப்டி உங்கிட்ட என்ன பாத்தேன்னு எனக்கே புரியலடி ' என்று புலம்பித்தள்ளியவன் உறங்கியும் விட்டான்.இவனை ஆட்கொண்டவளோ அங்கே வேறொருவரின் உறக்கத்தைக் கெடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
எதுவும் உனக்காக...💞 ✓
Romanceதன் வாழ்வில் நினைத்ததை அடையும் நம் நாயகன் தன் மனம் கவர்ந்த நாயகியை வெல்ல துடிக்கின்றான். சிறகு விரிந்து திரியும் பறவை போல் சுற்றித் திரியும் அவள் தன்னவனின் இதயம் எனும் கூண்டினுல் அடைபடுவாளா????இரு மனமும் வெவ்வேறு திசைகளில் பயனிக்க... அவன் காதல் கை...