4

899 40 24
                                    

மறுநாள் வேலைக்கு வந்த ஆயம்மா தன் மகளை அழைத்து வந்தது. "ஏய் அய்யாக்கு வணக்கம் சொல்லு மசமசனு நிக்காம வணக்கம் சொல்லு.
ஐயா....வணக்கம்..

ம்ம்ம் வணக்கம் உங்க பேரு ??

ராசாத்தி.

அதற்குள் அந்த ராசாத்தி தாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ராசாத்தியை அமர சொன்னவன் "இங்க பாருங்க ராசாத்தி நான் கல்யாணம் பன்னிக்க முதல் காரணம் நித்தேஷ் தான் அவனை நல்லா பார்த்துக்கிறேனு நீங்க உத்தரவாதம் தந்தா தான் கல்யாணம் என்ன நான் சொல்றது புரியுதா.

ம்ம்ம் புரியுது...இங்க பாருங்க ஐயா நான் நித்தேஷ் நல்லா பார்த்துக்குவேன் என்னை நீங்க நம்பலாம்.

சரி இன்னொரு கண்டிஷன் நித்தேஷ் பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கிறது. இனி நான் சம்பாரிச்சு சேக்குறது மட்டும் தான் உனக்கும் என் மூலமாக உனக்கு பிறக்கும் பிள்ளைக்கும் ஓகேவா???

சரிங்க ஐயா.

ஆமா நீ ஒரே மகளா??☺️கூட பிறந்த அண்ணன் தம்பி??

அண்ணன் இருந்தான் ஆனால் இறந்துட்டாங்க... நானும் அம்மாவும் தனியா தான் இருக்கிறோம்.

ஓ.....அப்படினா  அம்மாவும் கல்யாணம் பிறகு இங்கேயே இருக்கலாம்.

🌸🌸🌸🌸
சிறிது நேரத்தில் திவ்யாவிடம் இருந்து கால் வந்தது "ஹலோ ஆரவ் எங்க இருக்கிங்க???

இங்கே தான் மேடம் என்னோட வீட்ல.

ஓ...கொஞ்சம் வரமுடியுமா என்கூட கோர்ட் வரைக்கும்??

ஏன் மேடம் என்ன ஆச்சு?? என்றதுக்கு வாங்க சார் சொல்றேனு போனை வச்சிட்டாங்க திவ்யா😊இவனுக்கு புரியல சரின்னு அவங்க சொன்ன இடத்துக்கு பைக்ல போனான் அவங்களும் இவன்கூட பைக்ல ஏறிட்டு போனாங்க.

கோர்ட் வாசல்ல வக்கிலோட ஒருத்தர் நின்னுட்டு திவ்யா வை பார்த்து முறைச்சிட்டு இருந்தாரு. "திவ்யா மேடம் அந்த ஆளு உங்களுக்கு தெரியுமா??😊ம்ம்ம் தெரியுமே என்று பதிலளித்தார் திவ்யா இதை கேட்ட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை சிறிது நேரத்தில் திவ்யாவையும் அந்த ஆளையும் உள்ளே கூப்பிட டைவர்ஸ் வாங்க முழு சம்மந்தமா என்று நீதிபதி கேட்க சம்மந்தம் என்று இருவரும் சொல்ல அப்போது தான் ஆரவ் க்கு விளங்கியது இவர் திவ்யா மேடம் கணவர் னு. இப்ப இரண்டு பேருக்கும் டிவோர்ஸ்.

வரவழியில் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள் திவ்யா . தான் ஒரு போலிஸ் அதிகாரி என்பதை தாண்டி சராசரி பெண்ணாக அவளது மனம் கலங்கியது.

மேடம்...

ம்ம்ம் ??

உங்கள் இரண்டு பேருக்கும் நடுவில் என்ன தான் பிரச்சினை டிவோர்ஸ் எதுக்கு வாங்குனிங்க???

ஹாஹா ஏன்னா நான் போலிஸ்காரி ல அதான்.

அதுல என்ன பிரச்சனை மேடம்.

அது தான் எங்க மாமியார் வீட்ல பிரச்சினை யே..நான் வேலையை ராஜினாமா பன்னனும் சொன்னாங்க நான் பன்னல அங்க தான் புகம்பமே வெடித்தது. ஆனால் ஒரு போலிஸ்காரி க்கு ஒரு போலிஸ்காரன் தான் துணையாக இருக்க முடியும். தப்பு என்மேல தான் ,நான் அவரை கல்யாணம் பன்னியிருக்க கூடாது .

அப்படியில்லை மேடம் புரிதல் இல்லாமை தான் காரணம். அப்படி பார்த்தால் என் பொண்டாட்டி லதா நான் போலிஸ் னு தெரிஞ்சு தான் என்னையே கட்டிகிட்டா அவ ஒரு இல்லத்தரசி தான் ஆனாலும் எங்களுக்கு நடுவுல பிரச்சினை எதுவும் வரலை. அவநேரம் என்கூட சேர்ந்து வாழ குடுப்பனை இல்லை போயிட்டா. உங்கள் விஷயத்தில் கூட புரிதல் இல்லாதது தான் காரணம். ஒன்று நீங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி சராசரி மருமகளா வாழ்ந்துருக்கனும் இல்லை ஒரு போலிஸ்காரி கணவரா அவரு உங்களை புரிஞ்சு நடந்துருக்கனும். இரண்டு பேர்ல யாருமே விட்டு தரலைனா டிவோர்ஸ் தான் நடக்கும்.😂

அது எப்படி ஆரவ் நான் மட்டும் சராசரி பெண்ணாக இருக்கமுடியும் கஷ்டப்பட்டு ஐபிஎஸ் முடிச்சு எஸ்.பி பதவிக்கு வந்து ...???சர்வசாதாரணமா வேலையை விடுனா விட்றமுடியுமா??

ஹாஹா பதவி என்பது செய்யும் வேலையில் மட்டுமல்ல திவ்யா... சாரி சாரி...திவ்யா மேடம் "பதவி வீட்லயும் இருக்கிறது... மருமகள் என்பதும் ஒரு பதவி தான் ,மனைவி என்பதும் பதவி தான்.... உங்கள் மாமியார் என்பவரும் கணவரும் உயர்அதிகாரி தான்😂😂😂இதுல நீங்க சராசரி வாழ்க்கை யை கேவலமா நினைக்கிறதுக்கோ இல்லை கவுரமான பதவியை பெருசு நினைக்கிறதுக்கோ ஒன்னுல.

அவன் பேசுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள் திவ்யா.

தொடரும்



ஆரவ்Where stories live. Discover now