8

730 38 10
                                    

அந்த டெய்லர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரைந்தான் திவ்யாவும் அங்கு காக்கிசட்டை அணிந்த போலிஸ்காரரும் இருந்தனர். அதை பார்த்து அவனுக்கு ஒரே அதிர்ச்சி என்னடா டெய்லர் காணோம் யார் இந்த ஆளு என்று கிட்டே வந்து பார்த்தால் அது வேறு யாருமில்லை அவனுடன் ட்ரெயினிங்கில் ஒன்றாக வந்த மாரிமுத்து....

டேய் மாரி நீயா என்றான் ஆரவ் ஆச்சரியத்துடன்..

ஆமா நானே தான் .....

அப்ப நீ அங்கே டெய்லர் கடை வச்சது???

எல்லாம் அந்த பயில்வான் பாண்டியை பிடிக்க தான் அவ இடத்தில் எதிரே டெய்லர் கடையை போட்டன் அன்னைக்கே லதாவை கொலை பன்றப்போ ஆதாரம் வீடியோவாக எடுத்து வச்சிருக்கன்....ஆனால் சத்யமா அது உன் மனைவினு தெரியாது அங்க இருக்கிறது நீயினு நான் நினைக்கவேயில்லை ,யாரையோ கொலை பன்றானு தெரிஞ்சது அதான் வீடியோவை எடுத்தேன். நான் போலிஸ் னு அவனுக்கு தெரியாது . டெய்லர் வேஷத்துல அங்கே அவ்வளவு நாள் இருந்தேன், அவனை பிடிச்சு தந்தா ப்ரோமஷன் னு சொன்னாங்க அதான்😁

ஹாஹா சரி சரி அந்த வீடியோவை வச்சு அவனை அரஸ்ட் பன்னிடலாம். மாரிமுத்து ரொம்ப நாள் கழித்து உன்னை பாக்குறன் வா ஒரு காபி சாப்பிடுவோம்...என்று அவனை அழைத்து செல்ல அங்கு திவ்யா மட்டும் தனியே நிற்க சிறிது தூரம் சென்ற ஆரவ் "ஐயோ திவ்யா வை மறந்துட்டுமே "ஆ....திவ்யா வாங்க நீங்களும் என்றவுடன் "இல்லை நீங்க இரண்டு பேரும் ப்ரண்டுஸ் ஸோ....நீங்க இரண்டு பேரும் எதாவது மனசு விட்டு பேசுவிங்க இதுல நான் எதுக்கு விடுங்க நீங்க போய்ட்டு வாங்க.

மாரிமுத்து - மச்சி திவ்யா மேடம் ஏதோ தனியா உன்கிட்ட பேசனும் னு ஆசைபடுறாங்க போல....நான் கிளம்புறன் நீ அவங்களோட போயிட்டுவா.

திவ்யா என்ன நீங்க வாங்க காபி குடிச்சிட்டே பேசுவோம். என்றதும் அவனுடன் ஹோட்டல் செல்ல இருவரும் இரண்டு காபி ஆர்டர் செய்து பேசிக்கொண்டு இருக்க..

ஆரவ்.....உங்கள் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் அது வந்து எங்க அம்மா நேற்று உங்களை பத்தி பேசிட்டு இருந்தாங்க
...
திவ்யா என்ன சொல்ல போறாங்க னு ஆர்வமாக ஆரவ் கேட்டுக்கொண்டு இருந்தான் அப்போது தான் அதை கூறினாள் திவ்யா "உங்களை கல்யாணம் பன்னிக்க சொல்லி அம்மா சொன்னாங்க உங்களோட விருப்பத்தையும் கேற்க சொன்னாங்க"ஆனால் ஆரவ் நீங்க ராசாத்தி னு ஒரு வேலைக்காரி மகளை கல்யாணம் பன்னிக்க போறதா கேள்வி பட்டேன் அதனால இதுல எந்த கட்டாயமும் இல்லை நீங்க யோசித்து பதில் சொன்னாலே போதும்.

பதில் என்ன??

தொடரும்

ஆரவ்Where stories live. Discover now