1. மாமன் மகன் திருமணம். விரும்பாத பயணம்!

1.8K 11 0
                                    

வருடம் 2014.

வங்கியில் நேரம் போவதே தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்த சுரேஷ், திடீரென்று தன்னுடைய செல்போன் அலறுவதை கண்டு, எரிச்சலாக பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு செல்போனை எடுத்து பார்த்தான்.

 "ஹோம் காலிங்" என டிஸ்ப்ளேவில் தெரிய, எடுத்து ரகசியமான குரலில், அதே நேரத்தில் குரலில் கொஞ்சம் எரிச்சலும் சேர்த்து கொண்டு கொண்டு,

"என்னம்மா.. சொல்லு..?" என்றான் சுரேஷ்.

"டேய் சுரேஷு, நான் காலையில சொன்னது ஞாபகம் இருக்கு தான? வேலை முடிஞ்சதும், பக்கத்துல இருக்க போத்திஸ் போயி டிரஸ் எடுத்துக்க! அண்ணன் காலையில போன் பண்ணி கேட்டுச்சு..! மாப்ள டிரஸ்சு வாங்கிட்டாப்ளயான்னு! நானும் 'வாங்கிட்டான்'னு சொல்லிட்டேன்.. ஒழுங்கா போயி புது டிரஸ் வாங்கிட்டு வந்திரு.. நைட் ஊருக்கு கெளம்பனும்..  ஆபிஸ்ல ரெண்டு நாள் லீவு சொல்லிட்ட் இல்ல?" - அம்மா சொல்ல வந்த விஷயங்களை ஒரே மூச்சில் கொட்டினாள்.

"அம்மா.. ஆபிஸ் நேரத்தில போன் பண்ணி இம்சிக்கிற? நிறைய வேலை இருக்கு.. நான் கல்யாணத்துக்கு வரல.. நீயும் அப்பாவும் போயிட்டு வாங்களேன்.."

"ஏண்டா.. நூறு தடவை சொல்லிட்டேன், திரும்ப திரும்ப மக்கர் பண்ற? உன் தாய் மாமன் மகன் கல்யாணத்துக்கு..  நீ வரலன்னா எப்படி..?   சொல்ல போனா நாம எல்லாம் ஒரு வாரம் முன்னாடியே போய் எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்யனும்..! என்ன பண்றது..? உங்க அப்பாவுக்கு ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன், உனக்கு வேலையோ வேலை!  ரெண்டு நாள் முன்னாடி கூட போகலைன்னா ஊர் காறி துப்பும்!!! ரொம்ப நாளைக்கு அப்பறம் நம்ம வீட்ல நடக்குற நல்ல காரியம் டா.. எல்லாருமா சேந்து போனா தானே மாமாவுக்கு சந்தோசமா இருக்கும்? லீவு சொல்லிட்டு சீக்கிரம் வீடு வந்து சேரு..!!!"

"ப்ச்.. நீ மறுபடியும் ஆரம்பிக்காத.. நான் வர்றேன்....!"

"மறக்காம Readymade டிரஸ் வாங்கிட்டு வா.. என்ன சுரேஷு?"

"சரி.. வை.."

சுரேஷ் போனை கட் பண்ணி பாக்கெட்டுக்குள் வைப்பதற்குள், உடன் வேலை செய்யும் சுனில் எதிரே வந்து நின்றான்.

இது காதலா, முதல் காதலா! (My first Gay Love!)Where stories live. Discover now