10. அப்பாவின் கண்டிப்பு

639 5 0
                                    

சுரேஷ் அப்பாவின் முகத்தை பார்க்காமலே, "அப்படி எல்லாம் இல்லப்பா.. தலை வலி.. நான் பத்து நிமிஷத்துல கெளம்பிடறேன்.."

வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்ட சுரேஷை பார்த்து அப்பா,

"ஆட்டோ சொல்லிட்டேன்.. இன்னும் அரை மணி நேரத்தில வந்திடும்..  சாப்பிட வேற செய்யணும்.. சீக்கிரம்!" என கண்டிப்பாக கூற,

சுரேஷ் பாத்ரூம் ஷவரில் தண்ணீரை திறந்து விட்டு கண்களை மூடிக்கொண்டு நின்றான். நீர் குளிராக இருந்ததால் மூச்சு வாங்கியது. 

வெற்றியின் நினைவுகள் வந்து சில மணி நேரங்களாக தன்னை ஆட்படுத்தி இருந்தது சுரேஷுக்கு கொஞ்சம் களைப்பாகவும் இருந்தது.

சுரேஷ் குளித்து விட்டு, உடைகளை அணிந்து கொண்டு, டைனிங் டேபிளுக்கு வந்த போது அப்பா சாப்பிட்டு முடித்திருந்தார்.

அம்மா ஒன்றும் பேசாமல், இட்லியை எடுத்து தட்டில் வைத்து விட்டு தக்காளி சட்னியை பரிமாறினாள்.

அப்பா ரூமுக்குள் சென்ற பிறகு சுரேஷ், "என்னம்மா.. என் மேல கோவமா..?" என அன்போடு அம்மாவின் கையை பிடித்து கொண்டான்.

சுரேஷை ஒரு தரம் கனிவோடு பார்த்த அம்மா, "என்னை எத்தனை தடவன்னாலும் திட்டு.. வாங்கிக்கறேன்.. ஒரு கல்யாணத்தை பண்ணிக்கப்பா.." என கெஞ்சினாள்.

அம்மாவிடம் எதையோ சொல்ல நினைத்து, தயங்கி பிறகு எதுவும் சொல்லாமல் இட்லியை சாப்பிட்டு விட்டு கை கழுவினான் சுரேஷ்.

அம்மா, "உனக்கு லுங்கி, ஜெட்டி, பனியன், துண்டு எல்லாம் அந்த bagல வச்சிருக்கேன்.. பார்த்துக்க.. ஏதாவது இல்லைன்னா எடுத்து வச்சுக்க.. அப்பறம் என்னை குறை சொல்லாத.. உன் ஷேவிங் செட்.. சென்ட்.. எல்லாம் நீ எடுத்து வச்சுக்கோ.. அங்க ஊர்ல அதெல்லாம் கிடைக்காது.." என கூறிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.

--------------

எல்லாவற்றையும் Pack செய்து விட்டு மூவரும் ஆட்டோவில் ஏறினர். 

கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர சீட்டை ஆக்கிரமித்து கொண்டான் சுரேஷ். அவனுக்கு முன் சீட்டில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்து கொண்டனர்.

அங்கிருந்த பெட்டி கடையில் 'வெற்றி டுட்டோரியல்! நூறு சதவீத வெற்றி உத்திரவாதம்' என எழுதி இருக்க, சுரேஷ் விரும்பாவிட்டாலும் அவனுக்கு வெற்றியின் நினைவுகள் மறுபடியும் வந்தன.

இது காதலா, முதல் காதலா! (My first Gay Love!)Место, где живут истории. Откройте их для себя