3. Flashback: செம அடி!

790 9 0
                                    

கோலி குண்டு விளையாட்டோ, கிரிக்கெட்டோ, பம்பரமோ, கிட்டி விளையாட்டோ, எல்லாவற்றிலும் சுரேஷ் தன்னுடைய டீமில் தான் இருக்க வேண்டும் என வெற்றி முதலிலேயே ஊர் பசங்களிடம் சொல்லி விடுவான்.

சுரேஷ் எப்படி விளையாடினாலும், எவ்வளவு  மட்டமாக விளையாடினாலும், வெற்றி ஒரு வார்த்தை கூட திட்ட மாட்டான். சுரேஷுக்கும் சேர்த்து நன்றாக விளையாடி விடுவான் வெற்றி. வெற்றி இருக்கும் அணி தான் எப்போதும் ஜெயிக்கும்.

கல்லெடுத்து மாங்காய் அடிப்பதாகட்டும், மரமேறி கிளி பிடிப்பதாகட்டும், Catapult இல் குருவி அடிப்பதாகட்டும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பதாகட்டும் வெற்றியின் அருகிலேயே இருந்து எல்லாவற்றையும் ரசிப்பான் சுரேஷ்.

அப்போது சுரேஷுக்கு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்,

ஒருமுறை ஆற்றில் குளிக்கும் போது, சுரேஷ் தண்ணீரின் ஆழத்தை பார்த்து பயந்து கொண்டு தயங்கி கரையில் இருக்க, அங்கு குளித்து கொண்டிருக்கும் பசங்களில் ஒருவன்,

"என்னடா வெற்றி.. உன் அத்தை மகன் பொண்ணு மாதிரி பயந்துட்டு குளிக்க வர மாட்டேங்கிறான்..  என்னா போ..!" என நக்கல் பண்ண,

அவனை வெற்றி தண்ணீரில் போட்டு அடித்த அடி, முக்கிய முக்கு, இன்று நினைத்தாலும் சுரேஷுக்கு பசுமையாக இருந்தது.

மாமா அதை கேள்வி பட்டு அவனை பெல்ட்டால் அடிக்க, ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் வெற்றி கண்களை மூடி தாங்கி கொண்டான்.

மாமாவின் கண்டிப்பை அன்று தான் நேரில் பார்த்தான் சுரேஷ். 

"இனிமே அப்படி செய்ய மாட்டேன்னு சொல்லு.. சொல்லு விட்டுடறேன்.."

சுரேஷும், அத்தையும், அம்மாயியும் எவ்வளவோ தடுத்தும் மாமா விடவில்லை. 

வெற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை.

"இனி அப்படி செய்யமாட்டேன்னு சொல்றானான்னு பாருடி உன் புள்ள.. எவ்வளவு அழுத்தம்.. உன்னை..!!!"

அவர் கோபம் அதிகம் ஏறிப்போய் அடிகளை அதிகப்படுத்தினார்.

சுரேஷ் ஓடிச்சென்று மாமாவின் கைகளை பிடித்துக்கொண்டு, "மாமா.. வெற்றியை அடிக்காதீங்க மாமா.. வேண்டாம் மாமா விட்ருங்க.." என கெஞ்சினான்.

மாமா, சுரேஷை ஒரு பார்வை பார்த்து விட்டு,  பெல்ட்டை தூக்கி எறிந்து விட்டு கோபமாக வேகமாக வெளியேறினார்.

----------------------------

தனிமையில் அன்று இரவு,

சுரேஷ் வெற்றியிடம், "என்னடா.. மாமா கிட்ட 'இனிமே அப்படி செய்ய மாட்டேன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே..?" என்றான்.

வெற்றி, "சொல்ல முடியாது டா.. உன்னை பத்தி யாரவது ஏதாவது சொன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல.."

சுரேஷ் வெற்றி தன் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் மனம் நெகிழ்ந்தான். வெற்றியின் மீது பட்டை பட்டையாக வீங்கி இருந்த இடங்களை ஆறுதலாக தடவி விட்டு கொண்டிருந்தான். 

வெற்றி மீது சுரேஷுக்கு இனம் புரியாத அன்பு உண்டாக ஆரம்பித்தது.

இது காதலா, முதல் காதலா! (My first Gay Love!)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin