6. Flashback: ஆத்துல குளியல்!

719 4 0
                                    

ஒரு விடுமறை காலத்தில்,

வெற்றி, "சுரேஷு.. வாடா.. வெளிய போலாம்.." என ரகசியமாக அழைத்தான்.

"எங்க டா..?"

"ம்ம்ம்... ஆத்துல குளிச்சுட்டு வரலாம்.. அப்பறம்.. விஜய் நடிச்ச 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் நம்ம தியட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சாயந்திரம் அங்க போலாம்.."

இப்படித்தான் வெற்றி ஒவ்வொரு நாளும் 'என்ன பிளான்' என்பதை முன்னாடியே சொல்லி விடுவான்.

சுரேஷ் காபி குடித்து முடிக்க, வெற்றி கழுத்தை சுற்றி ஒரு துண்டை போட்டுக்கொண்டு சைக்கிளை வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

சுரேஷ் சைக்கிள் காரியர் இல் ஏற முயல, தடுத்த வெற்றி,

"இனிமே முன்னாடி பார்ல தான் உக்காரணும்.. சின்ன பசங்க தான் காரியர்ல உக்காருவாங்க.. ஒரு வருஷம் பொறுத்துக்கோ..  அடுத்த வருஷம்.. அப்பா ஹீரோ ஹோண்டா வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார்.. வாங்கி தரட்டும்.. நாம சமயபுரம், கொள்ளிடம், காவிரி பாலம், கல்பாளையம்.. ஸ்ரீரங்கம் ன்னு எல்லா ஊரையும் சுத்தலாம்" என உற்சாகமாக கூறினான்.

சுரேஷ் பாரில் உட்கார்ந்து கொள்ள, வெற்றி சைக்கிளை அழுத்தினான்.

வெற்றியின் தொடைகள் சுரேஷின் இடுப்பில் உரச, சுரேஷுக்கு புது புது உணர்வுகளை அது கொண்டு வந்தது.

அன்று ஆத்தங்கரை ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

வெற்றி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு, படி கட்டில் இறங்கி தன் சட்டையையும் கைலியையும் கழட்டி அங்கிருந்த கல்லில் வைத்து விட்டு சுரேஷை பார்த்து திரும்பினான்.

வெறும் ஜெட்டியோடு வெற்றியின் உடல் அழகை பார்த்து சுரேஷுக்கு வாய் அடைத்து போனது போல இருந்தது. 

அவனின் கருகரு சுருட்டை முடிகள், மாநிறம், ஈர்ப்பான கண்கள், இளஞ்சிவப்பு உதடுகள், அதற்கு மேலே அரும்பு மீசை, கச்சிதமான மார்பு, சிலையை ஒத்த இடுப்பு தொடைகள், ஜெட்டியில் பந்து போல முன்னே துருத்தி இருக்கு பூல் மேடு, சுரேஷின் நெஞ்சுக்குள் மெல்லிய மின்னல்களை ஏற்படுத்தின.

இது காதலா, முதல் காதலா! (My first Gay Love!)Wo Geschichten leben. Entdecke jetzt