7. அம்மாவின் டார்ச்சர்

641 4 0
                                    

வீட்டு காலிங் பெல்லை சுரேஷ் அடிக்க, அம்மா வந்து கதவை திறந்தாள்.

சுரேஷின் கையில் இருந்த போத்திஸ் பையை வாங்கிய அம்மா, 

"சுரேஷு.. என்னடா புது டிரஸ் வாங்கிட்ட போல.. " என பையை பிரித்து பார்த்து விட்டு,

"என்னடா.. சோவை கலர்ல சட்டை வாங்கி இருக்க.. நல்லா சிவப்பு மஞ்சள்ன்னு வாங்க வேண்டியது தானே.. இந்த சட்டை ஆயிரத்தி இருநூறு ரூபாயா?" என்றாள்.

"ப்ச்.. நீ சொல்ற மாதிரி எல்லாம்  சிவப்பு கலரு ஜிங்குச்சான்னு போட Shirt  முடியாது.. ஆபிஸ்க்கு பார்மல் டிரஸ்ல தான் போகணும்.."

"யாரும் இதை புது துணின்னு சொன்னா நம்ப மாட்டாங்கடா.. என்னடா இந்த காலத்து பசங்க என்ன மாதிரி டிரஸ் வாங்கி போட்டுட்டு சுத்துறாங்க.. நீ மட்டும் ஏன் இப்படி இருக்க..?"

"ஊர்ல இருக்க பசங்க எல்லாம் டாஸ்மாக்ல தான் இந்நேரம் இருப்பாங்க.. நான் மட்டும் வீட்டுக்கு நேரா வர்றேன் இல்ல?"

"ஒனக்கு உடனே பொசுக்குக்கு மூக்குல கோவம் வந்துருமே.."

சுரேஷ் அம்மாவை பொருட்படுத்தாமல், நேராக பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு, ரூமில் இருந்த ஏசியை ஆன் பண்ணி கட்டிலில் 'அக்கடா' என சாய்ந்தான்.

சில நிமிடங்களில் அம்மா காபியுடன் அவனை தேடி ரூமுக்கு வந்து விட்டாள்.

"சுரேஷு.. காப்பி குடி.."

சுரேஷ் காபி குடிக்கும் வரை அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தவள், இப்போது,

"எல்லோருக்கும் கல்யாணம் ஆகுது.. உனக்கு கல்யாணத்தை பண்ணி பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா? கருவப்பிள்ளை கொத்து மாதிரி ஒத்தை புள்ளைய பெத்து வளத்து ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கனும்னு ஆசை படறது தப்பா? ஏம்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டுற..?"

"ஆயிரம் தடவை உனக்கு சொல்லிட்டேன்.. நான் ஆபிஸ்ல நல்ல நெலமைக்கு போன பிறகு தான் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்.. உன் அண்ணன் மகனுக்கு ஆச்சுங்கிறதுக்காக நான் ஒரு கல்யாணத்தை பண்ணிக்க முடியாது. அதுக்கு நான் ரெடி இல்லை.."

"உனக்கு என்னடா குறைச்சல்..? ராஜா மாதிரி இருக்க..! எந்த பொண்ணு உன்னை வேணாம்னு சொல்லுவா..? லவ்வு கிவ்வுன்னு ஏதாவது மனசுல இருந்தா அம்மா கிட்ட சொல்லு கண்ணு.."

"நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற? இப்ப நீ கல்யாண பேச்சை நிப்பாட்டுறியா இல்ல.. நான் மறுபடி ஆபிஸ்க்கு போகட்டுமா.. எனக்கு தலைவலின்னு சீக்கிரமா வீட்டுக்கு வந்தா.. உன் புராணம் கேட்டு எனக்கு மண்டை இன்னும் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. " - சுரேஷின் குரல் பலமாக கோபமாக ஒலித்தது.

"தலை வலிச்சா மாத்திரை போட்டுக்கயேன்.. அதுக்கு ஏண்டா என்கிட்ட கத்துற?" என அம்மா கோபமாக செல்ல,

சுரேஷ் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூட மூட அவனுக்கு மறுபடியும் வெற்றியின் ஞாபகம் வந்தது.

இது காதலா, முதல் காதலா! (My first Gay Love!)Donde viven las historias. Descúbrelo ahora