இதற்கும் மேல் இந்த கண்ணாமூச்சியாட்டம் வசிக்கு தாங்கவில்லைதான். சலனமே இல்லாமல் வளைய வருவது வனமோகினிக்கு எளிதாய் இருப்பது போல வசியால் இருக்க முடியவில்லையே.
எப்படி முடியும்? சதா எதாவது சேட்டைகள் பண்ணிக் கொண்டிருப்பது வனியின் DNA பாட்டேர்ன் ஆச்சே. அதோடு அவள் சமையல், வீட்டை கவனிக்கும் பாங்கு அனைத்தும் வசியை கட்டிப் போட்டது.
அவனுக்கு தெரிந்த வனி பெண் வரிசையில் இயல்பாய் சேர்த்து கொள்ள முடியாதவள்.
நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் வனி.மருந்துக்கும் வெட்கம் எட்டிப் பார்க்காத வனி, வீட்டு வேலைகள், சமையல் எதுவும் கருத்தாய் கற்றுக் கொள்ளாத வனி இப்படிதான் அவனுக்கு அவள் நேற்றுவரை தெரியும். இன்று கதையே வேறு அல்லவா?
காதலை பிறகு கடையேற்றி விடலாம். இருக்கும் நட்பை இறுக்கி விட்டால்தானே தன் வனமோகினி தன் வசம் வருவாள். வசிக்கு நன்கு தெரியும் காதலை விட நட்பை உயிர் போல சுவாசிப்பவளாயிற்றே வனமோகினி. நேரத்தை கடத்தாமல் வசி காரியத்தில் இறங்கினான்.
வேலை முடிந்து வீடு வந்தவன், வனியை தேடி தோட்டத்திற்கு சென்றான். வசி அம்மா நட்டு வைத்து போயிருந்த ரோஜாக்கள் மலர்ந்து மனம் பரப்பிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு ரோஜாக்களாய் மென்மையாக தொட்டுப் பார்த்து பார்த்து வனி இரசித்துக் கொண்டிருந்தாள். மலர்களை வேர் வரை உற்று உற்று பார்த்து ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
இறைவனின் படைப்புகளை விந்தை போல வனி வேறு கோணத்தில் பார்ப்பாள், இரசிப்பாள்.
அதை தான் அப்பொழுதும் செய்துகொண்டிருந்தாள்.
YOU ARE READING
மூங்கில் நிலா (Completed)
Romanceவசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட...