காதலோடு அவளை அணைத்தவன், அவள் காதருகே கிசுகிசுத்தான்.
"பேபி மழை தூறல் போடுது, இப்படியே இங்க இருந்தா ஜன்னி வந்தே செத்திடுவோம், கெளம்பு கெளம்பு "வசி துரிதப் படுத்த,"Aik மழை, மாயலோகத்தில் மழை மாமா, ஜோரா இருக்குது பாருங்கள் "வனி வசி அணைப்பிலிருந்து விலகி மழை வசம் சாய்ந்தாள்.
துள்ளி துள்ளி புள்ளி மான் போல அவள் மழை நீரை கையில் ஏந்தி ஆட, அவனுக்குதான் திண்டாட்டம் ஆயிற்று.
"பேபி வந்திடு நல்ல புள்ளை தானே நீ "வசி அழைக்க அவள் அவனுக்கு போக்கு காட்டினாள்.
"போ மாமா ஸ்கூல் டைம் கூட என்னைய மழையில் நனைய விடமாட்டே. இழுத்துக்கிட்டு வந்திடுவ.
இப்போ பாரு இந்த மாதிரி மழையில் மலைல ஆடற சுகம் வருமா? நா வரல "சின்ன பிள்ளைப் போல மழையோடு வனி விளையாடிக் கொண்டிருந்தாள்.இவள் சரிபட்டு வரமாட்டாள் என்று வசிக்கு தோன்ற, பின்னாலிருந்து அவளை இறுக்கப் பற்றி தன் அணைப்பினில் நிறுத்தினான்.
"மக்கு மக்கு ஸ்கூல் டைம் உன் யூனிபோர்ம் வெள்ளை கலர் தானே, மழைல நனைஞ்சு உடம்போடு ஒட்டிக்குமேனு கூட தோணாம நனைவ, பக்கத்தில் உன்னை மழை மோகினியா பார்த்திட்டு நா பட்ட அவஸ்த்தை உனக்கு எங்க தெரிய போகுது.
இதுல அந்த குண்டு சீனியர் வேறே உன்னை முழுங்குற மாரி பார்ப்பான். ஆண் பிள்ளை பார்வைக்கும் பெண் பிள்ளை பார்வைக்கும் வித்தியாசம் இருக்குடி.
அதுக்குதான் எந்த அவஸ்தையும் வேணாம்னு உன்ன நான் மழைல நனைய விட்டது இல்லை. இப்போ நனைஞ்சிக்கோ. நான் கூட இருக்கேன் உரிமை உள்ளவனாய்.
YOU ARE READING
மூங்கில் நிலா (Completed)
Romanceவசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட...