அறைக்குள் நுழைந்தவளின் மனது அமைதியில்லாது தவித்தது. தான் உயிராய் காதலித்தவன் தான், உதறிவிட்டு போனவன் தான்.
பருவக் கிளர்ச்சி அது இதுவென்று கொன்று புதைத்த காதல் தான், இருந்தாலும் அதன் பின் ஒரு நாளும் அவள் நிம்மதியாய் உறங்கியதே இல்லையே.
அவனை பழி வாங்கிவிட்டோம் என்று அப்போது மனதை திருப்தி படுத்திக் கொண்டாலும், அதன் பின் வந்த இரவுகள் அனைத்துமே துன்பத்தின் தொடர் கதையல்லவா?
கண்களில் நீர் சுரந்தது. தன்மானத்தை விட்டு வசி முன் நிற்க அவள் என்றுமே விரும்பியது இல்லை.
மனம் குரங்குப் பிடியாய் அவன் அவளுக்கு செய்த காரியத்தையே நினைத்து தொலைத்தது.
பட்டாம்பூச்சியின் சிறகை பிய்த்து போட்டது அவனல்லவா?
ஏதேதோ சிந்தனையில் வனி உறங்கிப் போனாள். நள்ளிரவில் வனியின் உளறல் சத்தம் கேட்டு விழித்த வசி நேற்றிரவு போலவே வனி இன்றும் உறக்கத்தில் உளறுவதைக் கண்டு துணுக்குற்றான்.
ஓடி சென்று வனியை தன் மார்போடு அணைத்துக் கொண்டவனுக்கு வனியின் இந்த மாறுபட்ட போக்கு குழப்பத்தை விளைவித்தது.
நேரில் சீறுபவள் இரவில் ஏன் இப்படி அனத்துகிறாள் என்பது அவனுக்கு புரியவில்லை.
ஒருவாறு வனி ஆழ்ந்து உறங்கவும், அவளை மெத்தையில் கிடத்தியவன் நாசியில் மூலிகை நறுமணம் ஏறியது.
அப்பொழுதுதான் வனியின் அறையை சுற்றிப் பார்த்தான்.
ESTÁS LEYENDO
மூங்கில் நிலா (Completed)
Romanceவசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட...