மறு நாள் ஒரு வித இறுக்கத்துடனே இருவருக்கும் விடிந்தது. வசி வனி முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான்.
வழக்கமான அவன் புன்சிரிப்பு கூட தொலைந்து விட்டிருந்தது. வசியின் இறுக்கம் வனிக்கு புரிந்தது. அவளே அவனோடு வலிந்து சென்று பேசலானாள்.
"மாமா இன்னிக்கு சண்டே, ரெண்டு பேருக்கும் ஓய்வு நாள்தானே, வாங்க பூவேலி போய்ட்டு வரலாம். ப்ளீஸ் எனக்காக வருவீங்கதானே " வனி அப்படி அழைக்கவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் வசி கிளம்பி விட்டான்.
அவனுக்கும் எங்கேயாவது சென்றால் தேவலாம் என்ற மனநிலைதானே அப்பொழுது.
பூவேலி வழக்கமான பசுமையோடு அவர்களை வரவேற்றது. தோட்டத்திற்கு நடக்கும் பாதை தவிர்த்து வசியின் கைகளைப் பிடித்து வனி கொஞ்சம் காட்டுப் பகுதி போல இருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள்.
இதுவரை வசி அங்கே சென்றது கிடையாது. சுற்றிலும் பார்வையை ஓட்டியவன், "டேய் எங்கடா என்ன கடத்திட்டு போக பார்க்குற? இந்த இடம் புதுசா இருக்கே, இங்க நீ என்னை கூட்டிக் கொண்டு வந்ததாய் கூட ஞாபகம் இல்லையே "வசி கேட்க வனி முறுவலித்தாள்.
"பேசாம வாங்க மாமா, வாழும் சொர்கம் இங்கதான் மாமா இருக்கு. நீங்க அத பார்க்கனும்ணு எனக்கு விருப்பம் மாமா " பேசியவாறே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்தாள்.
YOU ARE READING
மூங்கில் நிலா (Completed)
Romanceவசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட...