அத்தியாயம் 18

2.5K 195 22
                                    

கல்யாண தேதி பிறகு முடிவு செய்யலாம் என முடிவு செய்து இரு வீட்டு பெற்றோரும் இருவரும் சேர்ந்து முடிவு செய்து கிளம்பினார்கள்.விக்ரமிடம் ஒரு அமைதி இருந்தது. மஹாவிடம் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது.

விக்ரம் அவன் பெற்றோரும் வீடு வந்து கொண்டிருந்தனர்.

ஆதித்யனார் ஆரம்பித்தார், "ஏன்பா, நீ என்ன பொசுக்குன்னு சரின்னு சொல்லிட்டே..ஆமா உள்ளே போய் அப்பிடி என்ன தான் பேசுனீங்க, வெளியே வரவும் அப்பிடி சொன்னே?" என்றார் மனைவியிடம்.

"ம்..அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் இல்லை.நான் வேண்டாம்னு சொல்லிட்டா மட்டும் சரின்னு நாம வந்திருக்கவா போறோம்" என்றாள் அன்னம் விஷயத்தை சொல்லாமல்.

ஆதித்யனார் மறுபடியும் ஆழம் பார்க்கும் விதமாக "ஆமா ரூமெல்லாம் நல்லா இருந்துச்சா? க்ளீனா?" என்று அவர் முடிக்கும் முன் அன்னம்.

"நல்லா தான் இருந்துச்சு? அந்த பொண்ணு தந்த சூப்பு கூட நல்லா தான் இருந்துச்சு.பொம்பளைங்க பேசுற எல்லா விஷயமும் வெளியே பேச முடியாதுங்க" என்றாள்.இனி மேல் அது சம்மந்தமா எதுவும் பேச வேண்டாம் என்பது போல.

விக்ரம் ஏனோ மெலிதான சிரிப்புடனே ஆனால் எதுவும் பேசாமல் வீடு கொண்டு வந்து சேர்த்தான்.

பெரியவர்கள் இருவரும் ஹாலில் உட்காரவும், மகன் மாடியில் இருந்த தன் அறைக்கு சென்று விட்டான்.

ஆதித்யனாரிடம் தண்ணீரை நீட்டி விட்டு, "அந்த பொண்ணு படபடவென பேசுறா ரொம்ப கோவக்காரியா இருப்பா போல..ம்ச்..இவன் வேற வாயத்தவன்..ம்ச்.. அதான்..கையை வச்சிடுவாளோன்னு யோசனையா இருக்குங்க" என்றாள் அன்னம் குழம்பிய மனநிலையில்.

"ம்ச்..ரத்தினம் பேசினப்போ கூட ரொம்ப பேசவே பேசாது அந்த பொண்ணுனு சொன்னாரு.ஒருவேளை அது சொன்ன மாதிரி சத்தமா பேசணும்னு பேசுதோ என்னவோ..எனக்கே கூட யோசனையா தான் இருக்குப்பா." என்றார் அவர் தண்ணீரை குடித்தபடி.

விக்ரம் கீழே இறங்கி வந்தான். பெற்றோர் இன்னும் ஹாலிலேயே பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now