அத்தியாயம் 13

2.9K 181 13
                                    

"இதுக்கு தான் கேட்கிறவனுங்க கிட்ட எல்லாம் என் நம்பரை கொடுக்காதேன்னு சொன்னேன். பாரு இந்த பண்ணாடை என்னன்ன பேச்செல்லாம் பேசுறான்னு" என்று போனில் கத்தினாள் மஹா. மறுபுறம் சத்தம் ஏதும் வரவில்லை.
ஒரு நிமிடம் யோசித்தவள் , போனை பார்த்தாள். விக்ரமிற்கு போயிருந்தது அந்த வாட்ஸாப் கால். டக்கென காலை கட் செய்தவள் 'சாரி' என ஒரு மெசேஜை தட்டிவிட்டு தாயை சாதாரண காலிலேயே கூப்பிட்டாள்.
" யாரு வழியா வந்துச்சு, இந்த பரதேசி?" - என்றாள் எடுத்த எடுப்பிலேயே மஹா.
"என்னடீ நீ? எடுத்த எடுப்பிலே இப்படித்தான் பேசுவியா? நான் பயந்துட்டேன் போ. யாரு அந்த யூஎஸ் வரனா? அவன் பேரென்ன.. ம்ம்.. ராமசந்திரன் தானே.. அவனுக்கு என்ன ? எதுக்கு இப்படி குதிக்கிறே? என்றாள் அன்னை.
"அந்த பண்ணாடைக்கு கம்பேடிபிளிட்டி  பார்க்கணுமாம், எல்லாத்துக்கும் சரி படுவேனானான் தெரியனுமாம். பொம்பளைக்கு பேசிக் மரியாதை கூட குடுக்க தெரியலை.. இவனை எல்லாம்.. என கட கட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தாள்.
தாயால் அவள் பேசியதை காது கொடுத்து கேட்க முடியாமல் போனை காதிலிருந்து தள்ளி பிடித்தாள்.
சற்று நேரத்தில் மகள் வசை பாடி முடித்து "லைனில் இருக்கியா?" என்றாள் மகள்.
"ம்ம்..இருக்கேன் சொல்லு " என்றாள் அம்மா.
"யாரு சொல்லி இவன் கிட்ட என் நம்பரை கொடுத்த?" என்றாள் மகள்.
"நம்ம மாமா சொல்லி தான் குடுத்தேன், அவரை பிடிச்சு சத்தம் போட்டு விடுறேன். சரி விடு இப்படி சத்தம் போட்டு எதாவது ஆக போகுதுதா.. தூக்கி தூர போட்டுட்டு அடுத்த வேலையை பாரு. பத்துக்கு எட்டு பேரு பக்கத்துல போன இப்படி தான் இருப்பாங்க. "என்றாள் ஆறுதல் படுத்தும் விதமாக.
" ம்ச்.. சனியன் பிடிச்சவன்.. இவனை எல்லாம் பெத்தாய்ங்களா, சாணியை கொண்டு செஞ்சாய்ங்களான்னு தெரியலை.. அவன் பேச பேச எனக்கு அப்பிடியே ஒமட்டிகிட்டு வந்திருச்சு"என்றாள் மகள் ஆற்ற மாட்டாமல்.
" சரிப்பா, விடு கொஞ்ச நாள் விட்டுரலாம். அப்புறமா வேற பையன் பார்க்கலாம்.. என்ன சரியா?? என்றாள் அன்னை சமாதானம் படுத்தும் விதமாக.
"ம்.. சரி ஓகே. ஆனா இவனுங்க எல்லாம் ஏன்மா இப்படி இருக்கானுங்க?? " என்றாள் மறுபடியும் மனசாராமல்.
"புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பளைங்க எல்லாம் அபூர்வம்டா குட்டி. உனக்கு எப்ப தான் விடியுமோ ?" என்றவளே தொடர்ந்தாள்.
"நீ சொல்லு அப்பாவும் நானும் காதல் மனமொத்த தம்பதிகளா? நிச்சயமாக கிடையாது.. ம்ஹூம்.. பெரியவங்க பார்த்து முடிச்சு வச்சாங்க. அவருக்கு பிடிச்சதை நான் செஞ்சேன். என்னை கட்டிகிட்டு வந்தாச்சு என் தேவைக்கும் அவர் பொறுபெடுத்துகிட்டாரு. வேண்டா வெறுப்பு இருந்தா கூட வெட்டிகிட்டு வெளியே போக பயமா இருக்கும். ஆனா இப்ப அப்பிடியா இருக்கு. நான் நாலு வேலை செய்யறேன், நீ நாலு செய்னு அதிகாரம் தூள் பறக்குது. புருஷன், பொண்டாட்டி, மாமியார், மாமனார், ஓரகத்தி, கொழுந்தன், நார்த்தனார்னு யாரும் தோற்று போக விரும்பவில்லை. அதனால தான் கல்யாணமும் குடும்பமும் இப்ப ரொம்ப  தோற்று போகுது. "என்றாள்.
" ம்ம்.. "என்றாள் மகள் சுரத்தையில்லாமல்.
" உடனே உன்னை பத்தி நீ எதுவும் நினைச்சுக்காதே, பழி போடுறதுக்கு தலை தேடுற கும்பலில் இருந்து உயிரோடு நீ வெளியே வந்தது தான் சரி."என்றாள் அன்னை அமர்த்தலாக.
"நான் எதுவும் நினைக்கவில்லை.. சரி.. நான் போனை வைக்கிறேன்.. அந்த லூசை பற்றி பேசி எரிச்சல் வந்தது தான் மிச்சம்." என்று விட்டு போனை வைத்தாள்.
போனை வைக்கவும், தான் பேசியதை விக்ரம் எதுவும் தப்பாக நினைப்பானோ என்று நினைத்தவள் 'அவனாக கேட்டால் சொல்லுவோம்' என்று நினைத்தபடி வேறு வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
விக்ரம், 'தானாக மஹா சொன்னால் , அவள் பேசியது என்ன என்று கேட்டு கொள்வோம்' என்று நினைத்தபடி வேலை முடித்து வீடு வந்து சேர்ந்தான்.
அப்பா இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.
"அப்பா, இன்னும் ரெண்டு நாளில் யூரோப் போகிறேன்பா வர ரெண்டு மாசம் ஆகும். அதுவரைக்கும்.." என்று தாயை பார்த்தான்.
அன்னம், தலைக்கு மேல் கையை தூக்கி அடித்து பெரிய கும்பிடு போட்டு "அய்யா சாமி, இனி உனக்கு பொண்ணு பார்த்தா என்னை என்னானு கேளு, போதும் சாமி. நீ ஒன்னு சொல்லுரே, உங்கப்பா ஒன்னு சொல்லுறாங்க. கிறுக்கி மாதிரி நான் தான் என் பிள்ளைக்கு கல்யாணம் முடியனும்னு கெடந்து அல்லாடுறேன்." என்று பொரிந்து கொட்டினாள்.
"அம்மா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..நான் இருக்க இன்டஸ்ட்ரீ, என் வேலை இதையெல்லாம் புரிஞ்சுகிட்டு அதை கடந்து என்னை அவங்களுக்கு பிடிக்கணும். "என்று அவன் முடிப்பதற்குள்
" அப்பிடி உட்கார்ந்து தேடினா, அறுபது இல்ல என்பதாவது கல்யாணம் கூட உனக்கு நடக்காது."என்றாள் வேகமாக.
விக்ரம் நிதானமாக அவளை பார்த்து
"சரிம்மா, நடக்க வேண்டாம்"என்று விட்டு மாடிக்கு தன் அறைக்கு சென்றான்.
அவன் கிளம்பி சென்ற அடுத்த நொடி தான் பேசியதை உணர்ந்தவன் கண் கலங்கி கணவனை பார்த்தாள். அவர் கையை விரித்து விட்டு "வயதான வார்த்தையிலே நிதானம் கூடும்னு சொல்லுவாங்க, இங்கே எல்லாம் தலை கீழா இருக்கு. ம்ஹூம்.. உனக்கு என்ன செய்யனும்னு தோணுதோ செய்" என்று விட்டு சாப்பிட்ட கையை கழுவினார்.
அன்னம் மாடியேறி மகன் அறைக்கு சென்று கதவை தட்டினாள்.
"வாங்கம்மா" என்று கதவை திறந்தான் மகன்.
" தம்பி, சாரிய்யா.. என்னவோ ஒரு படபடப்பில் அப்படி பேசிட்டேன். மனசுல எதுவும் வச்சுகாதேய்யா. எனக்கு உங்கப்பா சொல்லுராப்டி புத்தி மலிங்கி போச்சு அதான் என்ன பேசுறோம் ஏது பேசுறோம்னு யோசிக்காமே பேசிட்டேன். மன்னிச்சுடுப்பா" என்றாள் குரல் தழுதழுத்து அன்னம்.
"ம்ச்..என்னம்மா நீங்க எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. என்ன ஒன்று ஏற்கனவே நான் பட்ட அடியினால் என்னாலே இதை தவிர வேற எந்த மாதிரியும் யோசிக்க முடியவில்லை.. சாரிம்மா"என்றான் மகன்.
" அய்யோ என்ன தம்பி நீ.. ம்ச்.. இப்ப என்ன வெளிநாடு போறீயா? நல்லா போயிட்டு வா.. நீ பார்க்க சொல்லும் போது பொண்ணு பார்க்கிறேன். இல்லியா நீ உனக்கு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லு. அந்த பொண்ணையே முடிச்சிடலாம் என்ன சரியாய்யா? " என்றாள் அம்மா.
" ம்ஹூம்.. அம்மா நீங்களும் அப்பாவும் சொல்லும் பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதனாலே நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா."என்றான் மகன் உறுதியாக.
" சரி அது போகட்டும் நீ முதல்ல சாப்பிட வா தம்பி. "என்றாள் வாஞ்சையாக.
" ம்.. சரி வாங்கம்மா.. நானே கீழே வரலாம்னு தான் இருந்தேன். " தாயை அழைத்து கொண்டு கீழே வந்தவன். தானும் அவளுடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு மறுபடியும் திரும்பினான்.
அன்னம் அவள் அறைக்கு வந்து சேர்ந்தாள்.
" என்ன அம்மாவும் மகனும் சமாதானம் ஆகிடீங்களா? "என்றார் ஆதித்யனார்.
" நாங்க எப்ப சண்டை போட்டோம், சமாதானம் ஆக.." என்றாள் அவள் பதிலுக்கு.
"அது சரி, அப்ப நான் பார்த்தது படமாயிருக்கும்." என்று நக்கலாக சிரித்தார்.
"தம்பிக்கு கோபம் வராது உண்மை தான். ஆனா சரியான மலை முழுங்கி மஹாதேவன் பா இவன். என்ன அழுத்தம். " என்றாள் மனைவி.
"பாவம் அன்னம் அவன், ரொம்ப நம்பி ஏமாந்துட்டான். அதான் இப்ப யாரையும் நம்ப தயங்குறான். அடுத்தது நாம. நம்ம மறுபடியும் அவனால கஷ்டபட்டுட கூடாதுன்னு நினைக்கிறான்.. ம்ச்.. நல்ல பொண்ணா கிடைக்கணும். ம்ஹூம்.. பார்ப்போம். " என்று விட்டு போட்ட தூக்க மாத்திரையின் தாக்கத்தில் உறங்கி போனார்.
அன்னம் சில நேர யோசனைக்கு பின் உறங்கி போனாள்.
ரெண்டு நாளைக்கு பின், 'என்ன ஜி பிஸியா?' என்று மெசேஜினாள் மஹா.
'ஆமாங்க, ஏர்போர்டில் இருக்கேன். அவுட்டோர் போயிட்டு இருக்கேன். எதாவது இம்பாரடண்ட்டா? ' என்றான் அவன்.
'நத்திங்ஜி, ஹேவ் சேஃப் ஜர்னீ' என்றாள்.
'தேங்க்ஸ்ங்க' என்றான் அவன்.
இருவரும் வேற எதுவும் பேச நினைக்கவும் இல்லை. ஒருவருக்கொருவர் எதையும் தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. இந்த விசாரிப்பு இருவருக்கும் தேவையாய் மட்டும் இருந்தது.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேTempat cerita menjadi hidup. Temukan sekarang